பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

காக்கத் தெரியாதே. நீ இங்கே இந்த மூட்டையை இட்டாயா?” என்று கேட்டது.

குள்ள வாத்து, ‘குவாக் குவாக்’ என்று கத்திவிட்டு, “இது என்னுதல்ல - என் முட்டை வெள்ளையாக இருக்கும். இது மஞ்சள் முட்டை - என்னுதல்ல” என்று சொல்லித் தலையை ஆட்டிற்று.

ஆந்தை இப்படியே அங்குக் கூடியிருந்த பச்சைக்கிளி, மணிப்புறா, மைனா முதலிய எத்தனையோ பறவைகளைக் கேட்டது.

ஒரு பறவையும் அது தன்னுடையதென்று சொல்லவில்லை.

ஆனால், எல்லாப் பறவைகளும் அந்த மஞ்சள் முட்டையின்மேல் அன்பு கொண்டன. ஒவ்வொன்றும் அடை காப்பதுபோல அதன் மேல் உட்கார முயன்றது. அந்த முட்டை மிகவும் பெரிதாக இருந்ததால் எந்தப் பறவையாலும் அதன் மேல் உட்கார்ந்து அடை காக்க முடியவில்லை. அதனால் எல்லாப் பறவைகளும் சேர்ந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கத்தில் உட்கார்ந்து, அந்த முட்டைக்குச் சூடு உண்டாகும்படி செய்து பார்த்தன. பறவை அடை காக்கும்போது எப்படி முட்டைக்குச் சூடு கொடுத்து அதற்குள்ளே குஞ்சு வளர்வதற்கு உதவி செய்கிறதோ அதேபோல, எல்லாப் பறவைகளும் சேர்ந்து சூடு உண்டாக்க முயற்சி செய்தன, அவைகள் இரை தேடக்கூடச் செல்லவில்லை.

அந்த மஞ்சள் முட்டையின் மேலே அவைகளுக்கு அத்தனை, அன்பு உண்டாகிவிட்டது. இராப்பகலாக நான்கு நாள்கள் இப்படிப் பல பறவைகள் ஒன்றுக் கொன்று போட்டி போட்டுக்கொண்டு, அந்த முட்டையைச் சூழ்ந்து அமர்ந்திருந்தன.

ஐந்தாம் நாள் காலையிலே பொழுது விடிகின்ற சமயத்தில், அந்தப் பறவைகள் காட்டுகின்ற அன்பைப் பார்த்துவிட்டு, அந்த முட்டையிலிருந்து ஒரு தேவதை வெளிப்பட்டது. முதலில் தேவதை சிறியதாக இருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/8&oldid=1090497" இலிருந்து மீள்விக்கப்பட்டது