பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

-தது. பிறகு அது கொஞ்சம் பெரிதாயிற்று. அதைச் சுற்றித் தங்க நிறமான ஒளி வீசிற்று. அப்பொழுது அந்தத் தேவதை இனிமையாகப் பாடிக்கொண்டு நாட்டியம் ஆடிற்று.

“கூட்டு முயற்சியால் நான் வந்தேன்—உங்கள்
கூட்டு முயற்சியால் நான்வந்தேன்”

என்று அந்தத் தேவதை பாடிக்கொண்டே அழகாக ஆடிற்று.

பறவைகளுக்கெல்லாம் ஒரே ஆனந்தம். அவைகள் ஒவ்வொன்றும் ஓங்கிய குரலில் கூடவே பாடத் தொடங்கின.

“கூடி உழைத்தால் கோடி இன்பமாம்—அன்பாய்க்
கூடி உழைத்தால் கோடி இன்பமாம்”

என்று அவைகள் பாடின. மயில் அதற்கு ஏற்றவாறு ஆடிற்று..

இப்படி வெகு நேரம் அந்தப் பறவைகள் மகிழ்ச்சியோடிருக்கும்படி அந்தத் தேவதை ஆடிவிட்டு மறைந்துவிட்டது. மஞ்சள் முட்டையும் மாயமாக எங்கேயோ போய்விட்டது.

பறவைகள் பிறகு குதூகலத்தோடு, தமது கூட்டு முயற்சியால் கிடைத்த இன்பத்தை அனுபவித்துவிட்டு, இரை தேடச் சென்றன.

இன்னும் ஒரு தடவை அந்த மஞ்சள் முட்டை அங்கே காணப்படுமா என்று அவைகள் தினமும் பார்த்தன. ஆனால், அதன் பிறகு அந்த மஞ்சள் முட்டை காணவே இல்லை.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/9&oldid=1090500" இலிருந்து மீள்விக்கப்பட்டது