பக்கம்:மணமக்களுக்கு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23

அழித்துக்கொண்டு சாம்பலாகி விடுகிறது. இது அது செய்யும் தியாகம்!

(எ) கிறுஸ்தவ சமயத்தவர் மாதா கோயில்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். ஜபம் முடிகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி. இறுதியில் மெழுகுவர்த்தியைக் காணோம். இறை வழிபாட்டிற்குத் துணை செய்த அந்த மெழுகுவர்த்தி தன்னை அடியோடு அழித்துக் கொண்டு விடுகிறது. இது அது செய்யும் தியாகம்.

(ஏ) இந்துக்கள் தங்கள் கோயில்களில் சூடக்கட்டிகளை எலுமிச்சம்பழ அளவு கொண்டுவந்து கொளுத்தி, சுவாமியையும் அம்மனையும் பக்தியோடு வணங்குகிறார்கள். வழிபாடு முடிகிறது. மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இறுதியில் சூடம் இருந்த இடமே தெரிவதில்லை. இறை வழிபாட்டிற்குத்துணைசெய்த அது. இறுதியில் தன்னையே அடியோடு அழித்துக் கொள்ளுகிறது. இது அது செய்யும் தியாகம்!

புதிதாக இல்லற வாழ்வில் வலது காலை எடுத்து வைக்கும் மணமக்கள் இந்த 8 நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். மழை நீரைப்போன்ற, மருந்துச் செடியைப் போன்ற, ஆடு மாடு கோழிகளைப்போன்ற, ஊது பத்தி மெழுகுவர்த்தி சூடம் ஆகியவைகளைப் போன்ற தியாக வாழ்வை, பகுத்தறிவு பெற்றுள்ள மக்களாகிய நாமும் பின்பற்ற வேண்டாமா என்ற ஒரு கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். பிறருக்காக வாழ்ந்து மடிகின்ற அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்ய முடியாவிட்டாலும், மிகச் சிறிய அளவிலாவது தியாக வாழ்வு வாழ்ந்தாக வேண்டும் என்ற உணர்வாவது உண்டாக வேண்டும். அத பிறரை வாழவைத்து நாம் வாழ வேண்டும் என்பதே. இதையே ‘வாழ்வாங்கு வாழ்தல்’ என நல்லறிஞர்கள் கருதுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/25&oldid=1305731" இலிருந்து மீள்விக்கப்பட்டது