பக்கம்:மணமக்களுக்கு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



29


கொடை

13. அறம் என்பது கொடை வழங்குவதையும் குறிக்கும், இயன்ற வரையில் எளியவர்க்கு உதவ வேண்டும். பசித்தோர் முகம் பார்த்து மனம் இரங்க வேண்டும். உண்ணும்போது ஒரு கைப்பிடியாவது வழங்குவது எல்லோர்க்கும் எளிதானது. வறுமையில் உழல் வோர்க்கு மனமிரங்கி முடிந்ததைச் செய்வது நல்லது. 'ஐயம் இட்டு உண்' என்பது ஒளவை காட்டும் வாழ்வு நெறி. பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதலும், பழிக்கு அஞ்சி நடந்து பகுத்துண்டு வாழ்தலும் நல் வாழ்வுக்கு துணை செய்யும் என்பது பொய்யா மொழி. வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்பதும், இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் என்பதும் வள்ளற் பெருமான் வாக்கு.

ஈயென்று கேட்பது இழிவு: அவ்வாறு கேட்போரிடம் இல்லையென்று கூறுவது அதைவிட இழிவு என்பது புறநானூறு கூறும் புதுநெறி.

இந்த அறநெறியையும், அருள் நெறியையும் மண மக்கள் உயிர் உள்ள வரை மறவாது, உள்ளத்தில் வைத்து நடந்தொழுகுவது நல்லது.


மகள் கொடை

14. பெண் வீட்டார் திருமணம் செய்து கொடுப்பதை மகட்கொடை என்பர். மகட்கொடையோடு பொருட் கொடையும் கொடுப்பர். இதை வரதட்சணை எனவும் கூறுவர். இது சமூகத்தைப் பற்றியுள்ள ஒரு தீய பழக்கம். இதை நாட்டுப் பற்றுடையோரும், சமயத் தலைவர்களும், சமூகத் தலைவர்களும் வெறுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/31&oldid=1307773" இலிருந்து மீள்விக்கப்பட்டது