பக்கம்:மணமக்களுக்கு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

குழந்தைகள் தவறு செய்தால், அடித்துத் திருத்துவதை விட அதட்டித் திருத்துவதுதான் நல்லது தவறு செய்த பிள்ளைகளை, 'ஏன் செய்தாய்?' என்று கேட்டு மிரட்டு வதைவிட, 'இனிமேல் அப்படிச் செய்யாதே' என்று அன்போடு கூறி வளர்ப்பது நல்லது.

பெற்ற பிள்ளைகளுக்குப் பொருளைத் தேடி வைப்பதைவிட, புகழையும் பெருமையையும் தேடி வைப்பதே பெற்றோர்களின் கடமையாகும். இதில் மணமக்கள் கருத்தைச் செலுத்துவது நல்லது.

வயழ்வு உயர

17. மணமக்களின் வாழ்வு உயர வேண்டுமானால், அவர்கள் தங்கள் உளளங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளம் உயராவிடில், ஒருபோதும் வாழ்வு உயராது.

தாமரைக் குளத்தில் உள்ள பூக்கள் அதிலுள்ள நீரின் அளவைவிட உயர்ந்திருக்கும். ஒரு அடி நீர் இருந்தால் பூ ஒரு அடி உயரத்தில் இருக்கும். மூன்றடி தண்ணிர் வந்து விட்டால் பூ மூன்றடியிலும், ஐந்தடி தண்ணிர் வந்துவிட்டால் பூ ஐந்தடி உயரத்திலும் இருக்கும் அக்குளத்தில் 9 அடி தண்ணிர் வந்துவிட்டால், பூவும் ஒன்பதடி உயரத்தில் காட்சி அளிக்கும். 'வெள்ளம் உயர உயர மலர் உயரும், உள்ளம் உயர உயர நீ உயர்வாய்' என்பது வள்ளுவர் வாக்கு. குறளும் இதுதான்:

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு"

இதிலிருந்து. வாழ்வை உயர்த்திக் கொள்வதற்கு உள்ளத்தை உயர்த்திக் கொள்வது ஒன்றே சிறந்த வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/34&oldid=1309205" இலிருந்து மீள்விக்கப்பட்டது