பக்கம்:மணமக்களுக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35

வந்த கடிதத்தில் என் விடைக்கு ஒரு அஞ்சலட்டையும் இருந்தது. இதைக் கண்டு நான் அஞ்சவில்லை. அஞ்சலட்டையின் நடுவில், "அடக்கிப்பார்" என்று ஏழு எழுத்துக்களை மட்டும் எழுதி அனுப்பிவிட்டேன்.

இதைப் பார்த்ததும், துணிகளைத் துவை என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறான். அப்பெண் நீங்கள் இரண்டு துவையுங்கள். நானும் இரண்டு துவைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறது. துவைக்கிறாயா இல்லையா என்று அதட்டிக் கையை ஓங்கியிருக்கிறான். அப் பெண் அருகில் வந்து, மெதுவாக என்ன இரண்டு நாட்களாக வேறு மாதிரிக் காட்சியளிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறது. "கி.ஆ.பெ. கடிதம் எழுதியிருக்கிறார். இதோ பார் என்று எடுத்துக் காட்டியிருக்கிறான். அதைப் பார்த்த அப் பெண், "கி.ஆ. பெயுமாச்சு, நீங்களுமாச்சு. நான் மணப்பாறைச் சந்தையில் வாங்கி வந்த மாடு அல்ல. என்னை அடிமைப்படுத்துவதற்கு" என்று கூறிவிட்டது, மறுநாள் எனக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான். அதில் 'உங்கள் ஆலோசனை பயன் தரவில்லை; நான் என்ன செய்யட்டும்?' என்று எழுதியிருந்தான். அப்பொழுதுதான் நான் சிந்திக்கத் தொடங்கினேன். இவனுக்கு ஏழு எழுத்து தப்பு என்று எண்ணி, ஒரு எழுத்தைக் குறைத்துக் கொண்டு, ஆறே எழுத்தில் ஒரு சொல்லை எழுதி அனுப்பி விட்டேன். அது "அடங்கிப் போ" என்பது.

இது பெரும் பலன் தந்தது. படித்த பெண் அல்லவா? அடக்க அடக்க அடங்காத பெண், அடங்க அடங்க அடங்கிப் போய்விட்டது, அவர்கள் வாழ்வில் நல்லொளி வீசியது.

சென்னையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபொழுது, அவர்கள் இல்லத்திற்குச் சென்று நலம் வினவினேன். இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை, 'நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/37&oldid=1307074" இலிருந்து மீள்விக்கப்பட்டது