பக்கம்:மணமக்களுக்கு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

9. மணமகள் உறுதிமொழி;

"யானும் அவ்வாறே உறுதி கூறுகிறேன்"

10. தேங்காய் பழத்தட்டு ஒன்று மங்கல நாணுடன் பெரியோரின் வாழ்த்துக்காகச் சென்று வருதல்

11. உதிரிப் பூக்களை வாழ்த்துவதற்காகத் தாய்மார்களுக்கும் புெரியோர்களுககும் வழங்குதல்

12. திருப்பூட்டுதல்

13. வயது முதிர்ந்த பெண்களிற் சிலர் மங்கல நாணில் சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துதல்

14. வயது முதிர்ந்த ஆண்களிற் சிலர் மணமக்களுக்குத் திருநீறு இட்டு வாழ்த்துதல்

15. மணமகனுக்கு மைத்துனன் மோதிரம் அணிதல்

16. மைத்துனனுக்கு மரியாதை செய்தல்

17. மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு மாறி உட்காருதல்

18. சர்க்கரையை மணமக்களுக்கு வழங்கி, மற்றவர்க்கும் வழங்குதல்

19. நல்லறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்

20. தலைவர் முடிவுரை

21. மணமக்களைப் பொன்னாலும் பொருளாலும் வாழ்த்தி,பாலும் பழமும் கொடுத்தனுப்புதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/42&oldid=1525844" இலிருந்து மீள்விக்கப்பட்டது