பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

டுக் கிரியையினைச் செய்தல் வேண்டும். பஸ்மதாரணத்தைக் காட் டிலும் ருத்திராட்சதாரணம் அத்தியாவசியகமாம் யாகத்தில் நவ தோப்பியங்கநத்தினற் பஸ்மம் திரோகிதமாய் விடுமாதலின், விகுர்தியிஷ்டிகளில் அலங்காரகாலத்திற் பஸ்மதாரணஞ்செய்து கொண்டு இதர மதஸ்தர்களினது சகாயத்தைக்கொண்டு யஞ்ஞம் செய்தல்வேண்டும். அஃதும் ஈசுவரார்ப்பண புரஸ்ஸரமாகச் செய் தல் வேண்டுமென்பதாம் என்று உத்தரங் தந்தருளினர். இவ் வாறு உபதேசம் பெற்றவர் மதுரைமீகாட்சியம்மன் சங்கிதி வீதியி லுள்ள ரீநிவாஸ்யஜ்வா. இவர் பல யாகங்கள் செய்து மதுரை யம்பதிக்குக் கண்போல் விளங்கி மகோபநிஷத் வித்யாசாதகரா கிப் பாசுபத பதவியிலிருந்து முத்தியடைந்தனர் !

அக்காலத்திற் சோமசுந்தாபுரம் சுப்பிரமணிய சாஸ்திரிக ளென்று வழக்கமாயழைக்கப்படும் கணபதி பக்தர் என்ற ஒருவர் சிவனுரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தெழுந்து நின்றனர். அப் போது எமது சிவனர் அவரைப் பார்த்து, தும்மைநோக்கும்போது கணபதி ஸ்வரூபமாகக் காணப்படுகின்றதே" யென்று சொல்ல, அவருமதை யொத்துக்கொண்டு, "அடியோங்கட்கு வம்ச பாரம் பரையாய்ச் சிந்தாமணிக் கணபதி யுபாஸ்தியுண்டு. யானுங் கிருஷ்ண பட்சம் சதுர்த்தியன்று சந்திரோதய காலத்திற் சங்கட ஹாண சதுர்த்தி விரதத்தினை யாசரித்து, அருணுேதய முதல் இரவு பூஜாகால பரியக்தம் சந்தியாவந்த ஜபதேவதார்ச்சங் கள் செய்கிற காலங்கள் தவிர மற்றைக் காலங்களிலெல்லாம் கின்றுகொண்டே யிருப்பது முதலான விரதாதுஷ்டாகங்கள் செய்து வருகின்றேன் ! அதன் பலமானது செபகாலத்திற் சமஸ் தானவர்களுங் கணபதி ஸ்வரூபமாகவே யென் கண்ணுக்குத் தோன்றுமாறு செய்யும். அப்பலத்தின்ை இப்போது தங்களது தரிசகமும் லமித்தது. ஆதலின் அடியேன் பிறவிக்கடலைக் கடந்துய்யும் பொருட்டு எற்குச் சிவதத்துவத்தை யுபதேசித்தரு ளல் வேண்டும்' என்று பிரார்த்தித்தனர். அப்போது சிவனர் கணபதி பூசைசெய்து சிவபூசை செய்யவேண்டிய தாவசியகமாக லின் இவர் அதிகாரியே யாவர் என்று நினைத்துச் சிவதத்துவத்தை யுபதேசித்தனர். இவரும் பலகாட் சிவபூசைசெய்து சாம்பவ பதவியிலிருந்து மோடிமெய்தினர்! -