பக்கம்:மணிவாசகப்பெருமான் வரலாறு.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை


பகுதி முடிந்ததும் அதனால் உணரக்கிடக்கும் ஆய்வுரை களை விளக்கி எழுதிச்- சேர்த்திருப்பதும், அடிகள் மூன்றாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலே தேவார ஆசிரியர்களுக்கு முற்பட்டு விளங்கினர் என்பதைப் பல எடுத்துக்காட்டுக்களால் சிக்கறுத்து விளக்கியிருப்பதும்,அதனை விளக்குவதற்குப் போந்த பழைய செப்புப் பட்ட யத்தின் மூலத்தை நன்கு மொழிபெயர்த்து அதனை அம்மூலத்தோடு இறுதியிற் சேர்த்திருப்பதும், பொதுவாக அடிகளருளிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் நூல்களில் செறிந்து கிடக்கும் அருங்கருத்துக்களையும், சிறப்பாகத் திருவாசக நான்கு அகவல்களிலுள்ள அரும் பொருள்களையும் ஆய்ந்தெழுதிச் சேர்த்திருப்பதும் கற்பவர்க்கு அளப்பிலின்பம் அளிப்பனவாகும்.

இதன்கண் சேர்த்திருக்கும் செப்புப்பட்டயத்தை எழுதியனுப்பியுதவிய திருவனந்தபுரம் T. K. சோசப் அவர்களுக்குப் பெரிதும் நன்றி செலுத்துகின்றோம்.

இத்தகைய அரிய பெரிய ஆராய்ச்சி நூல்களை மிகவும் பாடுபட்டு எழுதித் தமிழ்மக்கட்குப் பயன்படுத்திவரும் பேரறிஞர் உயர்சைவத் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் நோயற்ற வாழ்விலுங் குறைவற்ற செல்வத்திலும் ஓங்கி எல்லா நலங்களும் பெற்று நீடு வாழ்கவென எல்லாம் வல்ல மங்கைபங்கனை இடையறாது வழுத்துகின்றோம்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.