பக்கம்:மணிவாசகர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கடவுளுக்கு அஞ்சி நடப்போமாக, மனிதனுக்கு அஞ்சி நடப்பதை ஒழிப்போமாக; நமது உள்ளத்தில் தெய்வமிருப் பதையும், அது நாம் நினைத்தல் நிகழ்த்தலைக் கண்டு வரு வதையும், அது நம்மை நேர்மையான வழியில் நடத்துவதை யும் உணர்வோமானால், நாம் கடவுள் ஒருவர்க்கன்றி வேறு எவர்க்கும் அஞ்சுவதை ஒழிப்போம்' என்னும் மகாத்மாவின் மணிமொழிகளையும் ஒப்பிட்டு நோக்குக. இன்னும் அப்பெரியாரது, - - "கடவுள் கணிதத்தில் நமது செயல்கள் குறிக்கப்படுகின்றன’’ என்னும் உண்மை மொழியை, "தொழுது தூமலர் தூவித் துதித்துகின்று அழுது காமுற்று அரற்றுகின் றாரையும் பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும் எழுதுங் கீழ்க்கணக் கின்னம்பு ரீசனே' என்னும் ஆளுடைய அரசுகளின் அருண்மொழியோடும், 'கடவுளிடத்திலும் அவரது வல்லமையிடத்திலும் அவரது அன்பினிடத்திலும் எனக்குள்ள உறுதி அசைக்கமுடியாதது" என்னும் அருமொழியை, - 'இறக்கினு மின்றே பிறக்குக வென்றும் இருக்கினும் இருக்குக வேந்தன் ஒறுக்கினும் ஒறுக்க உவகையு முடனே யூட்டினும் ஊட்டுக வானிற். - * - சிறக்கினுஞ் சிறக்க கொடிய தீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை - மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தால் மாற்றுவார் யாரென மறுத்தார்" என மணிவாசகனார் கூற்றாக வைத்துக் கூறும் பரஞ்சோதி யார் திருவாக்குடனும், - - "ஆராரெனக் கென்ன போதித்தும் என்னஎன்" னறவினை மயக்க வசமோ' I00

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/100&oldid=852400" இலிருந்து மீள்விக்கப்பட்டது