பக்கம்:மணிவாசகர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளில் வாழ்ந்த மக்களின் அறிவியக்கத்திற்கும், பொருளா தாரநிலை முதலியவற்றிற்கும், இற்றை நாளிலுள்ள அவை கட்கும் இடையீடு சாலவும் பெரிதாகுமன்றே? ஆகவே, உயிர்களிடத்துக் கொண்ட அருளையே அடிப்படையாகக் கொண்டு அவ்வக்காலத்து வாழ்ந்த பெரியார் பலரும் அது காலை மக்களிடம் என்ன குறைபாடிருந்ததோ அதை நீக்கு தற்குரிய நெறியை மேற்கொண்டு அதற்கு ஆவனவற்றை அவர்க்கு அறிவுறுத்திப் போயிருப்பாரெனக் கோடலே முறையென்க. உறுபசியும், ஓவாப்பிணியுமின்றி, நாடு செழித்து, குடி கொழுத்துள்ள அப்போது "நெருநல் அவ்வின்பத்தை நுகர்ந் தோம்; இன்று இந் நலனைத் துய்க்கின்றோம்; நாளை இன்ன மகிழ்ச்சியை அடைவோம்' என மக்கள் வாழ்க்கையின்பத் தையே எண்ணி, கடவுள் நினைவு அரும்பாதிருப்பர். அது 、蓄rr@象J3 'இன்றுகன்று நாளைகன் றென்றுகின்ற விச்சையாற் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே' என ஆளுடைய பிள்ளையார் அறிவுறுத்தருளினார். இருக்க இடமும் உடுத்த உடையும், உண்ண உணவு மின்றிப் பல கோடி மக்கள் பரிதவிக்கின்ற இதுகாலை ஒரு பெரியார் அது போன்ற உபதேச மொழிகளைக் கூறினாராயின் அது செவி டன் காதிற் சங்கூதியது போலிருக்குமன்றி வேறுயாது பய னைச் செய்யும்? இதனால் மேற்காட்டிய மணிமொழியைக் குறைத்துக் கூறினேனென்னும் முடிவுக்கு அன்பர் சிலர் வந் து விடா வண்ணம் வேண்டுகின்றேன். எனவே இற்றைந்ாட் பெரியார் மக்களின் வறுமை நோயைக் களையும் வினையில் முன்னணியாக நின்றே தொண்டாற்றுவரென்சு. எனினும் அப்பெரியாரனைவரின் குறிக்கோள் மட்டும் ஒன்றேதான் என்பதை அறிவுடையோர் யாவரும் மறுக்கார். - дох

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/102&oldid=852404" இலிருந்து மீள்விக்கப்பட்டது