பக்கம்:மணிவாசகர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டொன்று கருத்து ஒவ்வாது மாறுபட்டனவாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் பலவேறு சமயங்களையும் தன் உறுப்புக் களாகக் கொண்டு ஒளிர்வதும். இற்றை நாளில் தோன்றா நின்ற சமயங்களையும் அங்ங்னமே கொள்ளா நிற்பதும், மேல் வருஞ் சமயங்களையும் ஏற்றுக் கொள்ள இடந்தந்து திகழ்வதும், அன்பும் அருளுமாகிய அடிப்படையால் ஆக்கப் பட்டதுமாகிய பொதுக் கொள்கையாம் சைவ சமயமும், அதன் சாதனங்களும் இன்றும் நாளையும் நின்று நிலவுமாறு இறைவன் திருவருளால் தோன்றி அருளிய சமய குரவராம் பெருமக்கள் நால்வருள் ஒருவரும், பெயரளவினாலே தனது சிறப்பினைத் தெரிவிக்கும் உண்மை நெறியென்னும் சன் மார்க்கத்தில் நடந்து நமக்குக் காட்டியருளியவரும், திருந்துறு வேதச் சிரப்பொருள் முழுதும் குறுந்துறு நீழலிற் கொள்ளை கொண்டவரும்' அங்ங்ணங்கொள்ளை கொண்ட பொருளைத் தாமே நுகரும் உலோபிகள் சிலர் போலாது "நான் பெற்ற இன்பம் பெறுக விவ்வையகம்' என்னும் பெரியாரியல்புப்படி "முழுதுலகுந் தருவான் கொடையே சென்று முந்துமினே' எனவும், 'தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து மினே' எனவும் முறையே தம்மோடுடன் உள்ளவர்களையும் பின்னுள்ளவர்களையும் செலுத்தி நுகர்வித்தவரும், இன் லும் தமக்குப் பிற்காலத்தவராகிய நம்மனோரும் அதனை அடைந்துய்யத் திருவுள்ளங் கொண்டு, பல பதிகங்களையோ அன்றிப்பதிகத்தையோ பல திருப்பாட்டுக்களையோ அன்றி ஒரு திருப்பாட்டினையோ பல தொடர்களையோ அல்லது ஒரு தொடரையோ, பல மொழிகளையோ அல்லது ஒரு மொழியையோ அன்புடன் ஒதினார்களானால் அவர்கள் ஊனை உருக்கி உணர்வைப் பெருக்கி மனத்தைக் கரைத்து மலத்தைக் கெடுத்துத் தேனும் பாலும் தீங்கன்னலுமமுது மாய்த் தித்தித்து என்பினை உருக்கி அன்பராக்கவல்ல கரு வாசம் போக்கும் திருவாசகமென்னும் ஒப்புயர்வற்ற திப்பிய தேனைத் தமது மலர் வாயினின்றும் வழியச் செய்தவரு மாகிய மாணிக்கவாசகராவார் . . 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/11&oldid=852420" இலிருந்து மீள்விக்கப்பட்டது