பக்கம்:மணிவாசகர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என நாணனை நோக்கிக் கூறினார். எனவே இவ்வியைபு பற்றி அடிகள் நாயனாரைப் பாராட்டியதென்க. மற்றுமுள்ள காரணங்களைக் காண்பதற்கு முன்னரே நாம் உலகியல்பு ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வேமாக. அதாவது: ஒருவன் இவ்வுலக வாழ்க்கையில் தான் இன்ன இன்ன இடம் பொருள் ஏவலைப் பெற்று இவ்விவ்வாறு நலந்துய்க்க வேண்டுமென்று கருதி அதனை அருளுமாறு ஆண்டவனை வேண்டுவானாயின் பலகாலும் தன் விருப்பத்தைத் தனித் தனிக் கூறி வேண்டுவான். ஒரோவழி தான் வேண்டுவ அனைத்தும் ஒரு சாத்தானிடத்தில் இயல்பாய் அமைந்து கி ட ந் த ன வ ா னா ல் அச்சாத்தானைப்போல யாள் வாழ்க்கையுடையேனா என நினைத்து இரங்குவான் என்பது. நமது அடிகள், 'சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கு மத்தன்' s 'கானுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் பேணு மடியார்' என அருளியிருத்தலை நோக்குங்கால் சீவகரணங்களனைத் துஞ் சிவகரணமாக நிகழப்பெற்றவர் செய்யும் எவ்வகை வினையும் நல்வினையேயாகுமெனவும், அத்தகைய பேறு தமக்கு அருளவேண்டி ஆண்டவணை விரும்பி வேண்டிள் ரெனவும் அறிகிறோம். ஆயின் அடிகள் இந்நிலையை அடையவில்லையோ வெனின், பெரியாருக்குத் தமது வெற்றி தோன்றுவதில்லை யென முன்னரே காட்டப்பட் டிருப்பதனால் அடைந்த அவர் அடையவில்லை யெனக் கருதல்ே இயல்பென்க. அற்றேல், - "சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி யெனையாண்ட" எனவும், 'சித்தமல மறுவித்துச் சிவமாக்கியெ னையாண்ட” 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/116&oldid=852434" இலிருந்து மீள்விக்கப்பட்டது