பக்கம்:மணிவாசகர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுமோ? எனக்கருதி, அன்பின் முதிர்வால் தாம் மறந்து கூறியதை மறைக்கும் பொருட்டுத் தன் தோழனைக் கேலி செய்வான் போன்று, ஒற்றி யூரென்ற ஆனத்தி னாலது தானோ அற்றப் படவா ருரதென் றகன் றாயோ முற்றா மதி சூடிய கோடிக் குழகா எற்றாற் றணி யேயிருந் தாயெம் பிரானே' எனக் கூறியதனாலுமென்க. எனவே, மேற்காட்டியவற்றால் நமது அடிகள் ஆண்ட வனிடத்து எவ்வெவற்றை வேண்டிக் குறையிரந்து நின்ற னரோ, அவையெல்லாம், கானவர் தலைவன் வாழ்க்கையில் கவின் பெற விளங்கினவாகவின், அதற்குக் காரணம் அவரது பேரன்பே எனக் கருதித் தமது அன்பின்மைக்கு மறுதலை யுவமமாக அவரது அன்புண்மையை அடிகள் கூறினாரென் பதும், அஃது ஒர் உலகியல் பென்பதும் பிறவும் பெறப் பட்டன. இங்கு மாணிக்கவாசகரையும் கண்ணப்பரையும் சீர் துரக்கி யார் பெரியர்? யார் சிறியர்? என்று செய்த ஆராய்ச்சியன்று இதுவென்பதையும், அங்ங்ணம் கருதிச் சீற்றங் கொள்ளக் கூடாதென்பதையும், பெற்றுப் பெறா தாரைப் போல வருந்தும் பெரியாரிலக்கணத்திற்றலை நின்ற நமது அடிகளின் கருத்துக்கு இது சாலுமென்பதையும் அன்பர்கட்கு நினைவூட்டுகின்றேன். இது கற்போர்க்குச் சிறிது பயன் விளைக்குமேவெனக் கருதி சற்று விரித்தெழுத நேர்ந்தது. அறிஞர் பொறுப்பா ராக. இனி, இதனை இம்மட்டில் நிறுத்தி மேற்செல்வேமாக. இங்ங்ணம் தமக்கு "அன்பில்லை, அன்பில்லை எனப் பல படக் கூறிய நமது அன்பர் ஆண்டவனை நோக்கி அவ் வன்பை அருளுமாறும் பலபட வேண்டுகின்றார். அவை, 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/125&oldid=852452" இலிருந்து மீள்விக்கப்பட்டது