பக்கம்:மணிவாசகர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூய உள்ளத்தின் கண்ணே ஆண்டவன் இடையறாது. அருள் நடம் புரிந்து கொண்டிருப்பன். இதனை, எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போல் எண்ணி யுள்ளே' ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவரவ - ருளங்தான்சுத்த' சித்துருவாய் எம்பெருமான் கடம்புரியு மிடமென * * யான்தெரிந்தேன்' என்னும் இராமலிங்க அடிகளின் இன்மொழியால் அறிக. எனவே, மேற்காட்டிய வன்பட்ட' என்ற பாட்டினால் அவ்விராமலிங்கனார் சொக்கலிங்கக் கடவுளை நோக்கி, கருணைக் கடலே! உலகத்தைப் பற்றி உன்னைப் பற்றாத (நீ எத்துணைத் துன்பமுறினும் அது குறித்து வருந்துவதற் குக் காரணமில்லாத என்றபடி) எனது களங்கமுள்ள (நீ சிறிதுந் தங்கப் பெறாத என்றபடி) நெஞ்சமானது தேவரீர் என் பொருட்டன்றி நெடுங்காலத்திற்கு முன் மாணிக்க வாசகர் பொருட்டுக் கூவியாளாக வந்து மண் சுமந்து பிரம் பால் அடியுண்டதை இன்று கேட்டு என் நெஞ்சம் இடி யுண்டதனால் நின்னையன்றி வேறு பற்றுக் கோடில்லாத அவரது தூய உள்ளம் தம்பொருட்டு வந்து நீ அடியுண்டதை நேரிற் பார்த்த அஞ்ஞான்று எத்துணைத் துன்பம் அடைந் திருக்குமோவென எண்ணுங்கால் அந்தோ என்னால் பொறுக்க முடியவில்லையே! என்று கூறி அதனை நினைந்து நினைந்து கரைந்து கரைந்து உருகினாரென்பதை உன்னி யுன்னி உருகுவோமாக. .. இப்பெரியார் இங்ங்னமே நாயன்மார்கள் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியிலிடுபட்டு அந்த வண்ணமாக நின்று அப் பயனை நுகர்தலை அவரியற்றிய திருவருட்பா வெனும் அன்பு நூலின்கண் பலவிடங்களிற் பரக்கக் காணலாம். நமது அடிகளின் வரல்ாற்றிலுள்ள இப்பகுதியில் ஈடு பட்டு இடருழந்த இவர் வாகீசப் பெருந்தகையாரின் வர 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/138&oldid=852479" இலிருந்து மீள்விக்கப்பட்டது