பக்கம்:மணிவாசகர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டிற் குமட்டு மல்லாமல் எல்லா நாட்டிற்கும் உண்டு. தங்கள் காலத்தில் எவற்றைச் சிறந்தவை என்று கருதினார் களோ அவற்றை எல்லாம் தாம் பாடும் வரலாறுகளில் வைத்துப் பாடிவிடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. தமக்கு முன்னர் அதே வரலாற்றைப் பாடியவர்கள் கூறியவற்றைக் கூட மாற்றியும், திரித்தும் பாடும் பழக்கம் ஏற்பட்டுவிட் டது. இதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை; அவர் களுடைய ஆர்வம் ஒன்றுமட்டுமே இவ்வாறு பாடக் காரண மாயிற்று இந்த அடிப்படையை மறவாமல், நாம், மணி வாசகர் வரலாற்றைப் பாடிய மூவர் கூற்றுக்களையும் ஆய்தல் வேண்டும். மனிதன் சந்திரமண்டலத்தில் சென்று இறங்குகின்ற இற்றை நாளில் பழைய வரலாறுகள், கருத்துக்கள், நூல்கள் ஆகியவற்றுள் எவற்றையாவது படிப்பதானால், அவை இக் காலச் சூழ்நிலைக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்ற அடிப்படையிலேயே காண்டல் வேண்டும். திருவாசகம் இன்றைய மனிதனுடைய வாழ்வுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை அறிவதே நாம் இன்று திருவாச கத்தைப் பயன்படுத்தத் தூண்டு கோலாகவும் அமைகிறது. திருவாசகம் பக்தி நூல் என்பது உண்மைதான். ஆனால், அதே நேரத்தில் இவ்வுலகில் இன்று வாழும் மனிதன் இத் துயர் நிறைந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ப தையும் கற்றுத்தருகிறது. அது ஏதோ குருட்டுத்தனமாகப் பாராயணம் செய்ய வேண்டிய நூல் என்று மட்டும் கருதிப் பொருளைக்கூட அறிய முற்படாமல் பாட்டை மட்டும் முணுமுணுப்பதால் பயன் ஒன்றும் ஏற்பட்டுவிடாது இக் காலத்திற்கும், ஏன், எக்காலத்திற்கும் பயன்படக்கூடிய நூல் திருவாசகம். இந்நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா நாட்டிற்கும் பயன்படக்கூடிய நூல் திருவாசகம், ஆம்: அணுயுகம் என்று கூறப்பெறுகிற இக்காலத்துக்கு வேறு எந்த நூல் பயன்பட்டாலும் படாவிட்டாலும் திருவாசகம் மிகமிக இன்றியமையாது, பயன்படக்கூடிய ஒன்றாகும் 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/152&oldid=852508" இலிருந்து மீள்விக்கப்பட்டது