பக்கம்:மணிவாசகர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று பேசுவதாகச் சேக்கிழார் பாடுகிறார் அன்றோ. அதுதான் விட்டகுறை தொட்டகுறை என்று கூறப் பெறு கிறது. திருஞான சம்பந்தப் பிள்ளையாரைத் தந்தையார் குளத்தங் கரையில் நிற்க வைத்துவிட்டுத் தண்ணிரில் மூழ்கு கிறார். குழந்தை அழுகிறது. அன்றுவரை அவர் வீட்டில் அழுதிருக்கலாம். ஆனால், அந்த அழுகைக்கும் இன்று அழும் அழுகைக்கும் வேறுபாடு உண்டு என்று கூறவந்த சேக்கிழார் முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங் கினார் (ஞா. பு. 61) என்று பாடுமுகமாக ஞானசம்பந்தர் விட்டகுறை காரணமாக அழுதார் என்று கூறுகிறார். மணிவாசகர் திருப்பெருந்துறையினுள் நுழைந்தவுடன் ஒரு முழுமாற்றம் அடைகிறார். அங்கு மரத்தடியில் அமர்ந்: திருந்த துறவியைக் கண்டார். யாரோ ஒரு துறவியைக் கண்ட மாத்திரத்தில் அவர் காலடியில் வீழ்ந்துவிட்டார். என்று நினைந்துவிட வேண்டா. அமைச்சராயிருந்து, பல்வேறு வகையான மனிதர்களையும் கண்டு தம் கூர்த்த, மதியாலும் கல்வியாலும் அவர்களை எடைபோட்டு அறி கின்ற பழக்கமுடையவர் மணிவாசகர் என்பதை மறந்து விடக் கூடாது. எனவே, குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த துறவியார் சாதாரண மனிதரோ துறவியோ அல்லர் என்பதை அடிகளார் உடனே கண்டுகொண்டார். காணற்கரிய ஒரு பெரியார் என்பதை அறிந்துகொள். வது வேறு; அத்தகையவரிடம் ஈடுபடுவது வேறு. அதிலும் ஒரு பேரரசின் தலைமை அமைச்சர், குதிரை வாங்கவேண் டும் என்ற குறிக்கோளுடன் பணத்துடனும், ஏவலருடனும், வருபவர் தம் குறிக்கோளை மறக்கின்ற அளவுக்குத் துறவி யிடம் ஈடுபட்டுவிட்டார். இந்த ஈடுபாடு அவரையும் மீறி தடைபெற்றது என்று அறிகிறோம். அறிவின் துணை கொண்டு இளவயதில் அமைச்சராய் அமர்ந்த ஒருவர் ஒரு. பெரிய செயலைச் செய்யப் புறப்பட்டுச் செல்லும் வழியில் தம்மை மறந்து, தம் நிலைமையை மறந்து தம் கடமையை. மறந்து, தம் உடன் வருகின்ற பரிசனங்களையும் மறந்து. 芷5亨。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/157&oldid=852518" இலிருந்து மீள்விக்கப்பட்டது