பக்கம்:மணிவாசகர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலமை நயம் புலமை நயம் என்ற தலைப்புக் கொடுக்கப்பட்டிருப் பினும் திருவாசகம் புலமை நயந் தெரிவதற்காக ஏற்பட்ட நூலன்று என்பதை நினைவில் கொள்வது நலம். ஒரு பொருளை ஆராயப் புகுமுன்னர் அது எதுபற்றியது என்ற தெளிவான எண்ணம் இருத்தல் வேண்டும். சி. எஸ். லூயி" என்பார் மில்டனுடைய 'சுவர்க்க நீக்கத்துக்கு ஒர் அழகிய திறனாய்வு வரைந்துள்ளார். அந் நூலின் தொடக்கத்தில் திறனாய்வு செய்பவன் கவனிக்க வேண்டிய ஒன்றை வலி யுறுத்துகிறார். - "புட்டிகளின் மூடியைத் திறப்பதற்குரிய ஸ்க்ருவையும் (Cork screw) மாதா கோவிலையும்பற்றி ஆயத் தொடங்கு முன், முன்னது புட்டிகளைத் திறப்பதற்காக அமைந்தது. என்பதையும் பின்னது மக்கள் சென்று வழிபடுவதற்காக அமைந்தது என்பதையும் மனத்துட் கொள்ள வேண்டும். கார்க் ஸ்குரு என்பது காய்கறி நறுக்குவதற்கு ஏற்பட்ட தென்றும், மாதாகோவில் சீட்டுக் கச்சேரி நடத்த ஏற்பட்ட இடம் என்றும் நினைப்பவன் அவை இரண்டுபற்றியும் ஆராயாமல் இருப்பதேமேல்” என்பது லூயியின் கூற்று. அதே போலத் திருவாசகம் எத்தகையது என்பதை அறிந்து கொள்ளாமல் அதன் புலமை நயத்தைப் பேசப் புகுவது முறையன்றுதான். ஆனால், திருவாசகம் ஓர் இலக்கிய நூலன்று என்பதையும், மலங் கெடுத்து மனங் கரைக்க -ஏற்பட்ட பக்தி நூல் என்பதையும் நன்கு அறிந்துகொண்ட பிறகு அதுபற்றி ஆராயப் புகுவதில் தவறு இல்லை. திருவாசகத்தில் புலமை நயம் உண்டு என்று கூறுவது தேவையில்லாத ஒன்று கல்வி என்னும் பல்கடற் பிழைத்துக்(4-38)'கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் (556) என்று பாடிய ஒரு பெருந்தகையின் பாடல்களில் கவிதை நயம், சொல் ஆட்சி, இனிய ஓசை முதலியன அமைதலில் வியப்பு ஒன்றும் இல்லை. என்றாலும், —12 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/185&oldid=852576" இலிருந்து மீள்விக்கப்பட்டது