பக்கம்:மணிவாசகர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவற்றை நோக்க ஆராய்ச்சி என்னுந் திருமகள் ஒரு பால் மேற்காட்டிய குணங்களமைந்த நல்லாரின் தூய உள். ளமாகிய அரங்கமேடையில் நடிக்கின்றாள். மற்றொருபால் அவள் பேய் வடிவெடுத்து அக்குணங்களில்லாத புன் மக்களி டம் தலைவிரித்துத் தாண்டவமாடுகின்றாள். எங்ங்ணமாயி னும் உண்மை காணும் நோக்கத்தோடு கூடிய ஆராய்ச்சி வேண்டுமென்பது ஒருதலை. ஆராய்ச்சிக்குங் கருத்து வேற்று மைக்கும் இடந்தராத நாடு நாடன்று இற்றை ஞான்று நம் நாட்டிலுள்ள மக்கள் ஒரு சிலரின் குறுகிய நோக்கம் பற்றி இதனைச் சிறிது விரித்து எழுத நேர்ந்தது அறிஞர்கள் பொறுப்பாராக. இனி மேற்குறிக்கின்றே னென்றதை ஈண்டுத் தருகின் றேன். அடிகளின் வரலாறு பெரும்பாலும் திருவாசகத்தி லுள்ள ஆதரவுகளைக் கொண்டு எழுதப்பட்டது என முன் எனரே காட்டப்பட்டது. அடிகள் தம்மை இறைவன் இறைவி யோடும் வந்து ஆட்கொண்டானெனத் திருவாசகத் தில் பல விடங்களில் கூறியருளுகின்றார்; அவை, "கூறுடைய மங்கையுந் தானும் வந்தருளி' (கீர்த்தித் திருவகவல்) கருவா யுலகினுக் கப்புறமா யிப்புறத்தே மருவார் மலர்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயி லந்தணனா யாண்டு கொண்ட திருவான தேவற்கே சென்று தாய் கோத்தும்பி" 'நானுமென் சிங்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல் வானுந் திசைகளு மாகடலு மாயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்று தாய் கோத்தும்பி' . (திருக்கோத்தும்பீ) "அரையாடு காக மசைத்தபிரா னவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வங் தாண்டதிறம் 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/20&oldid=852605" இலிருந்து மீள்விக்கப்பட்டது