பக்கம்:மணிவாசகர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பன. இங்ங்ணம் எட்டு இடங்களிற் கூறியிருத்தலை நோக்குமிடத்து, இறைவன் ஞானாசிரியனாக வந்து ஆட் கொண்ட பின்னம், எங்கோ அம்மையுந் தானுமாக வந்து காட்சி தந்தருளியிருக்க வேண்டுமென்று கொள்ளின் அதிலே தவறில்லை. இவ்வுண்மையை அடிகள் வரலாறு கூறிய மூன்று ஆசிரியர்களுங் கூறினாரில்லை. ஈண்டு பெரிய புராணத்திற் காணப்படும் செய்தி ஒன்று கூர்ந்து நோக்கத் தக்கது. அது, 'வடிவுடை மழுவேந்தி மதகரிஉரி போர்த்துப் பொடியணி திருமேனிப்புரி குழலுமை யோடுங் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றுாரில் அடிகளில் வழிப்போந்த அதிசய மறியேனே' என்று தொடங்கி ஆளுடைய நம்பிகள் அருளிச்செய்த திருக்கூடலை யாற்றுார்ப் பதிகத்தை ஆதரவாகக் கொண்டு சேக்கிழார் பெருந்தகை, "வம்புரீ டலங்கண் மார்பின் வன்றொண்டர் வன்னி - கொன்றைத் தும்பைவெள் ளடம்பு திங்கள் தூயநீ ரணிந்த சென்னித் தம்பிரா னமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து கொம்பனா ராடல்ரீ mடு கூடலை யாற்றுார் சார' செப்பரும் பதியிற் சேரார் திருமுது குன்றை நோக்கி ஒப்பரும் புகழார் செல்லு மொருவழி யுமையா ளோடும் மெய்ப்பரம் பொருளா யுள்ளார் வேதிய ராகி கின்றார் முப்புரி நூலுங் தாங்கி கம்பியா ரூரர் முன்பு' - "கின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்தசிங் தையராய்த் தாழ்வார் இன்றியா முதுகுன் றெய்த வழி.எமக் கியம்பு மென்னக் குன்றவில் லாளி யாருங் கூடலை யாற்று ரேறச் சென்றதிவ் வழிதா னென்று செல்வழித் துணையாய்ச் செல்ல' (ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்). என வரலாறு கூறியருளினர். என்பது. ‘ “ ’ ... ႏွစ္တို႔ႏိုင္ငံိ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/22&oldid=852649" இலிருந்து மீள்விக்கப்பட்டது