பக்கம்:மணிவாசகர்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பாடலிலும் கூறியருளுதல் காணலாம். சோத்து உன்அடியம் என்றோரைக் குழுமித்தொல் வானவர் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன் (173) என்றவிடத்தில் தன் திருவடியை வணங்கினார்க்கு இமை யவர் தொழும் பதம் தருபவன் (சோத்தம்-இழிந்தோர் உயர்ந்தோர்க்குச் செலுத்தும் அஞ்சலி) என்ற கருத்தையும் பேசல் காணலாம். இனி அடி கள் சங்க நூல்ளிகலும் திருக்குறளிலும், தேவாரங்களிலும் எந்துணைப் பயிற்சியுடையார் என்பதும் அவற்றுள் எத்துணைக் கருத்துக்களையும் சொற்றொடர் களையும் எடுத்து ஆளுகின்றார் என்பதும் அறியவேண்டு மாயின் பேராசிரியர்கள் வெள்ளைவாரணனார் அரிதின் முயன்று, ஆய்ந்து எழுதிய பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதியில் அவற்றை விரிவாகக் காணலாம். இறையனார் களவியல் உரை முதற் கொண்டு அடிகள் கற்றிருந்தார் என்பது மட்டுமன்று அதில் வரும் குறையைக் கூட செப்பஞ் செய்து கூறியுள்ளார் என்பதையும் அறிதல் வேண்டும். களவியல் உரைக்காரர் எங்கோ பிறந்த ஒருவ வனும் பிறிதெங்கோ பிறந்த ஒருத்தியும் வினை வயத்தால் ஒன்று கூடுகின்றனர் என்பதை அறிவிக்க, வடகடல் இட்ட ஒரு நுகம் ஒரு துளை, தென்கடலில் இட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போலவும்...... என்று எழுதிப் போனார். ஆனால் இந்தியாவில் யாண்டும் வடகடல் இல்லை. எனவே இதில் காணப்பெறும் பிழையை உணர்ந்த அறிஞராகிய அடிகள் தம் கோவையின் 6 ஆம் பாடலில், வளைபயில் கீழ்கடல் கின்றிட மேல்கடல் வானுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத் தொல்லோன்' என்று கூறும் முறையில் அந்த உவமையில் ஈடுபட்டமையின் அதனை விடாது போற்றிப் பயன்படுத்தும் அதே நேரத்தில் அதில் உள்ள பிழையையும் போக்கிவிடுகிறார். 231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/232&oldid=852675" இலிருந்து மீள்விக்கப்பட்டது