பக்கம்:மணிவாசகர்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை: (திருவாய். 4,9.1) இவை அனைத்தையும் ஓர் ஆன்மா துணிவுடன் தாண்டிச் சென்றாலும் இறுதியில் பரமபதப் படத்தில் கடைசியாக இருக்கும் பாம்பைப்போல ஒன்று குறுக்கிடுகிறது என்பதை இறுதியில் கூறுகிறார். - "உலோகா யதனன் எனும் ஒண்திறல் பாம்பின் காலபே தத்த கடுவிடம் எய்தி' (போற்றி. அக. 56,57) ஏனையவற்றிற்குக் கூறாத அடைமொழிகளை அடிகள் "உலகாயதருக்குத் தந்தது சிந்தித்தற்குரியது. பாம்பின் விடம் இரத்த ஓட்டத்தை நிறுத்தி உயிருக்கு உலை வைப்பது போல உலகாயதரும் காட்சி அளவை' ஒன்றையே பிரமாணமாகக் கொண்டு மேற்கொண்டு சிந் திக்க விடாமல் தடுத்து முன்னேற்றத்தை முடிக்கின்றனர். மேலும் எத்துறையில் செல்பவர்களும், எவ்விதமான சமயச். சார்புடையவர்களும் உலகாயதம்' என்ற பாம்பினாற் கடி படாதிருத்தல் கடினம். ஆன்ம யாத்திரையில் சோர்வு ஏற் படுதல் என்பது திண்ணம். அச்சோர்வு எப்பொழுது ஏற் படும் என்பதை மறைமுகமாகக் கவனித்துக் கொண்டிருந்து ஆன்மாவினுடைய முன்னேற்றத்தைத் தடுத்து அதனைக் கீழிறக்கக் காத்து நிற்பது உலகாயதம். ச்ோர்ந்து நிற்கும் ஆன்மாவிற்கு இனி இதன் மேலும் முயற்சி வேண்டா, தேவையற்ற முயற்சியால் வருத்தம் தவிர நீ அடையப்போவது யாதொன்றும் இல்லை என்று கூறும் உலகாயதம் பரமபதப் படத்தில் உள்ள பாம்பைப் போல், அனைத்தையும் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்துவிடு தல் ஒருதலை. எனவே அடிகள் அந்த உலகாயதம் பலவித 263

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/267&oldid=852744" இலிருந்து மீள்விக்கப்பட்டது