பக்கம்:மணிவாசகர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலங் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ' எனவும் ஆளுடைய அடிகள் அருளியிருக்கின்றதனால் இவ் விரண்டு பதிகங்களும் ஆண்டவன் அடிகளின் பொருட்டு நரிகளைப்பரிகளாக்கிக்கொண்டு குதிரை வீரனாக வந்ததும், அடிகளும் வந்தியுமாகிய இருவர் பொருட்டும் மண் னெடுக்குங் கூலியாளாக வந்து பாண்டியனாற் பிரம்படி பட்டு மறைந்ததுமாகிய நிகழ்ச்சிகள் நடந்த பின்னரே பாடப் பெற்றனவாதல் வேண்டுமெனக் கூர்ந்து நோக்கில ரெனக் கூறின் அது மிகையாகாதென நினைக்கிறேன். இங்கு அன்பர்கள் உள்ளத்தின்கண் ஒன்றைப் பதித்து வைத் துக் கொள்ள வேண்டுகின்றேன். அது என்னையெனின் இங்ங்ணம் ஆசிரியர்கள் பிழை பாட்டினை எடுத்துக் காட்டு தலால் அவர் புலமை, பெருமை முதலியவற்றிற்கு இழுக்கு நேர்ந்து விட்டதென்றாதல், அத்தவறுகளை எடுத்துக் காட்டுகின்றவர்கட்கு அமையாததொரு பெருமை வந்து விட்டதென்றாதல் எண்ணாததுடன் மக்கள் எளிதிற் செய் தற்கரிய வினைகளை மேற்கொள்ளின் அதிற்பிழை நேருதல் இயல்பு என்பதாகும். இனி, இப்பரஞ்சோதி முனிவரும், வேம்பத்துார் நம்பி யும் மணிவாசகப் பெருமான் வரலாறு ஒன்றையே கூறும் நோக்கத்தோடு நூல் செய்யவில்லை. ஆலவாயின்கண் நிகழ்ந்த ஆண்டவ னருள்விளையாடல்களைக் கூறியவர்கள், அடிகளின் வரலாறு அம் மதுரைப்பதியின்கண் தொடர் புள்ளவரையிற் கூறி எஞ்சிய பிற்பகுதியைச் சுருக்கமாகக்கூறி முடித்தனர். கடவுண்மா முனிவர் ஒருவரே அடிகளின் வரலாறு ஒன்றையே கூறும் கருத்தோடு 'திருவாதவூரர் புராணம் எனப் பெயரிட்டுக் கொண்டு நூல் பாடிமுடித் திவர். இவர் கல்யாண ஆரவாரத்தினால் தாலி கட்ட மறந்து விட்டார் (இது தவறான பழமொழி; தாவி காட்ட மறந்தார்’ gỡ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/27&oldid=852747" இலிருந்து மீள்விக்கப்பட்டது