பக்கம்:மணிவாசகர்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேகரித்த பேராற்றலை (Conserved Energy) ஒரே நாளிற் பயன்படுத்தி இவ் வுடலை அணுச் சிதைவு செய்து விடுகின் றனர். தாம் வாழும் காலத்தில் பிறருக்கு உபகாரம் செய்வது தவிரப் பிறருடைய உதவியை நாடாத இவர்கள் தாம் மறைகின்ற காலத்திலும் தம் உடலை எடுத்து அப் புறப்படுத்த வேண்டிய பணியைப் பிறர் செய்ய வேண்டாத படி உடலையும் அணுச் சிதைவு செய்து கொள்கின்றனர். திருவாதவூரர் என்ற பாண்டிப் பேரரசின் தலைமை அமைச்சரை ஒர் ஆன்ம யாத்திரை புறப்படுமாறு செய்து, திருப்பெருந்துறை சேர்ந்தவுடன் அவரை மணிவாசகராக மாற்றி, நம் போன்ற ஆன்மாக்கள் எத்துணைத் துன்பங் களை வழியில் சந்திக்குமோ அவை அனைத்தையும் மணி வாசகரைச் சந்திக்கச் செய்து, அவற்றால் பெறும் துயரத் தையும் பாடச் செய்து, இத்துணைத் துன்பங்களைச் சந்தித் தாலும் இறுதியில் உய்கதி உண்டு என்பதைக் காட்டி, உய்கதி பெற்றவர்கள் எத்தகைய இன்பத்தை அனுபவிப் பார்கள் என்பதையும் எடுத்து விளக்குமாறு செய்து, துன் பங்கண்டு கலங்க வேண்டியதில்லை என்பதையும் திடமாகக் கூறுமாறு செய்து, இறையனுபவத்தின் பிழிவாக இருக்கும் திருவாசகத்தையும் அருளிச் செய்யுமாறு செய்து, இவ்வுலகத் தில் வாழும் உயிர்கட்குத் தன் பரங்கருணையால் இறைவன் உதவினான் என்று கூறலாம். வேகமாக முன்னேறிச் செல்லும் அவசர மயமான விஞ் ஞான உலகத்திற்கும் திருவாசகம் மிகவும் தேவைப்படுகிறது என்று கூறவும் வேண்டுமோ! 279

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/283&oldid=852763" இலிருந்து மீள்விக்கப்பட்டது