பக்கம்:மணிவாசகர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களிற் சிலர் தலைவன் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சியேயின்றித் திரிகின்றனர். சிலர் தாமே த்லைவர் எனத் தருக்குவர். சிலர் பொருள் முதலியவற்றாற் சிறிது சிறந்த ஒருசில மக்களையே தலைவராகக் கருதித் தடுமாறு கின்றனர். சிலர் இறைமைக் குணங்களிலராயினாரைத் தலைவரெனத் திரிபுணர்ச்சி கொண்டு திரிகின்றனர். சிலர் தலைவனொருவன் இருக்கலாம்; ஆனால் அவன் இவன் தானெனத் துணிந்து கூற இயலாது என்பர். மற்றொரு சிலர் இன்ன இன்ன இலக்கணமுடையவன் தலைவனாவான் என அறிந்துவைத்தும் 'ஆரா ரெனக்கென்ன போதித்து மென்ன என்னறிவினை மயக்கவசமோ' என்னுந் திண்மையிலராய் மதிநுட்பம் நூலோடமைந்து கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாகிய சொல்வன்மை உடையராய ஒருவர் வந்து 'நீவிர் கருதும் இலக்கணமுடையவன் தலைவனல்லன். இவ் விலக்கணங்களையுடையவன்றான் தலைவன்' என வேறு சில இலக்கணங்களைக் கூறினாராயின் மயங்கி விடு கின்றனர். இங்ங்ணம் மக்கள் தந்தலைவனை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாது தலை தடுமாறுகின்றனர்களாகலின் தன் தலைவனை நன்குணர்ந்து கொள்ளும் நாயினுங் கடை புராயினர். : இனி இருட்டறையிற் குருட்டுச்சேய்போற் கிடந் துழன்ற உயிர்களைத் தன் பெருங் கருணையால் எடுத்து உடல், கரணம், உலக முதலியவற்றை உதவி அவ்வுயிர்கள் நிலைத்தற் பொருட்டு ஒன்றாயும், பொருள்களை அறியும் படி அறிவித்தற் பொருட்டு வேறாயும், அங்ங்ணம் அறியி னும் அறிந்தவாறே நுகரும் சுதந்தரம் அவைகட்கு இன்மை யினால் அவற்றை நுகர்வித்தற் பொருட்டு உடனாயும் நின் றருளி ஒவ்வொரு மாத்திரையும் உண்டி முதலியவற்றால் ஒம்பியருளுந் தலைவனது கைம்மாறில்லா நன்றியை ஏனைய உயிர்களினும் சிறந்து பாராட்டுதற்குரியவர் பகுத் தறிவாகிய மனவுணர்வைப் பெற்ற மக்களேயன்றோ? அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/37&oldid=852773" இலிருந்து மீள்விக்கப்பட்டது