பக்கம்:மணிவாசகர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகைச் சூழ்ச்சிகளில் இறுதியதாகிய கல்லொடு பிணித்துக் கடலிற்போட்டதினின்றும் தப்பிக் கரையேறித் திருப்பாதி சிப்புலியூரில் எழுந்தருளியிருக்கும் தோன்றாத் துணைவனை வணங்கிக் கொண்டு திருவதிகை வீரட்டானஞ் சென்று அவ் விதியுட் புகுகின்ற காட்சியைச் சேக்கிழார் முதலில் தமது உள்ளத்தில் வரைந்து கொண்டு பின் நமக்குப் பெரிய புராணத்தில் எழுதிக் காட்டுவது, தூயவெண் ணிறு துதைந்த பொன்மேனியுங் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிங்தையு ருைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெல் வாயுமுடையார் புகுந்தனர் விதியுள்ளே” (திருநாவுக்கரசு நாயனார் புராணம் -140) என்பதாகும். இங்ங்ணமே அவர் திருவாரூர்த் G5మిణణా 'ள்ண்ங்கி அவ்வூர் வீதியில் உழவாரப் பணிசெய்யுந் தோற். றத்தை - "மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாருங் திருவடிவு . - - மதுரவாக்கிற்: சேர்வாகுந் திருவாயிற் lந்தமிழின் மாலைகளும் - . செம்பொற்றாள்ே சார்வான திருமணமு முழவாரத் தனிப்படையுங் - . . . தாமுமாகிப் பார்வாழத் திருவிதிப் பணிசெய்து பணிந்தேத்திப் - பரவிச்செல்வார்' (டிெ-225) எனவும், ஆளுடைய பிள்ளையாரைக் காணச்செல்லுங் காட்சியை, "சிந்தை யிடையறா வன்புந் திருமேனி தனிலசைவுங் கங்தை மிகையாங் கருத்துங் கையுழவா ரப்படையும் 44;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/44&oldid=852781" இலிருந்து மீள்விக்கப்பட்டது