பக்கம்:மணிவாசகர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக் கூறுவாராயினர். இங்கனம் தவத்தினால் மிக்கா ராகிய பெருமிழலைக் குறும்ப நாயனார் இடையறாது நம்பியாரூரர் என்னுந் திருப்பெயரைப் போற்றியே பல பேற்றினை யடைந்தாரெனப் பின்னே சொல்ல வேண்டு மென்பதை நினைவில் வைத்தே முன்னர் அப்பெயருக்கு 'தவத்தினால் மிக்கார் போற்றும் நம்பியாரூரர்' என்னும் இலக்கணங் கூறினாரென்பது நன்கு கற்றவர்க்குப் புலனாவ தொன்று. இனி, இராமாயணமென்னுங் காப்பியச் சோலையுட் புகுந்து பார்க்கின் கம்ப நாடரின் நல்லிசைப் புலமையைக் காட்டுவனவாகி, மலர்ந்து மணம்வீசும் பல மலர்களைக் காணலாம். அவற்றுள் ஒன்று இங்கு நுகர்வோம். இராமபிரான் தன்னாருயிர்க் காதலியாகிய பிராட்டி யாரோடும், இன்னுயிர் இளவலாகிய இலக்குவனோடும் கான்புகுதலை மேற்கொண்டு நகரின் வாயிலைக் கடப்ப தற்கு முன்னே பிராட்டியார் காடு எங்குளது?’ என்று கேட்ட செய்தியை அங்குக் கூறாமலும், சீதாபிராட்டியைத் தேடச் சென்ற அனுமானிடத்தில் பிராட்டியைக் கண்டு இன்ன இன்ன அடையாளங்களைக் கூறுவாயாக’ என்று இராமபிரான் கூறிய இடத்திற் கூறாமலும், அனுமான் இலங்கையில் இராவணனாற் சிறைப்படுத்தியிருந்த பிராட்டியாரைக் கண்டு இராமனுடைய எழிலனைத்தையுங் கூறி, பின் அவன் கூறிய சில செய்திகளை அடையாள மாகச் சொல்லுகின்றான் என்னுமிடத்து, 'நீண்டமுடி வேந்தனரு ளேந்திகிறை செல்வம் பூண்டதனை நீங்கிகெறி போதலுறு நாளின் ஆண்டங்க ராரையொடு வாயி லகலாமுன் யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய்' (உருக்காட்டுப் படலம்-61) எனக் கம்பநாடர் கூறியதை நுனித்து நோக்கின் அவர் அந் நூலைச் செய்வதற்கு முன்னரே இத்தனை காண்டங்களாக 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/47&oldid=852784" இலிருந்து மீள்விக்கப்பட்டது