பக்கம்:மணிவாசகர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறக்கச் சமய மென்றேனும், அல்லாவிடில் இது நல்ல சமயம் போவீராக’ என்றேனும் சொல்வதனால் உணரலாம். இங்ங்னம் பல வினைகட்கும் பண்புகட்கும் பொதுவாய் நின்று அவற்றுள் யாதாயினும் ஒன்றுடன் கூடியே வருகின்ற பொதுச் சொல் ஒன்று தனித்து வருமாயின் அதற்கு ஒர் சிறந்த பொருள் கொள்ளுதல் ஆன்றோர் மரபு. எடுத்துக் காட்டாக,'ஒழுக்கம்' என்ற சொல் நன்மை, தீன்ம, கூடாமை என்ற மூன்றுக்கும் பொதுவாக நின்று நல்லொழுக்கம், தீய வொழுக்கம், கூடாவொழுக்கம் எனப் பயின்றுவருமாயினும், பலவிடங்களில் அது தனித்து வந்து நல்லொழுக்கம் என்ற சிறத்த பொருளையே தருவதை நூல்களிற் பரக்கக் காண லாம். ஆதலின், சமயம் என்ற பொதுச் சொல்லும் தனித்து வந்தால் ஒர் உயர்ந்த வினையோடு கூடிய காலம் என்ற பொருளே கொள்ளவேண்டும் என்க. அவ்வினை யாதெ னின், மக்கள் இவ்வுலகத்திற் பெறக்கடவனவாகிய பல சிற் றின்பங்களை அவாவி அவற்றை அடைதற்குரிய பல நெறி களிலும் செல்லும் மனமுதலிய கருவிகளை மடக்கி, என்றும் அழியாப் பேரின் டி வடிவாகிய இறைவனை அடைதற்குரிய வழியிற் செலுத்துதலாகும். உலகத்து மக்களால் இயற்றப் படும் வினைகளனைத்தினும் ஃதே தலைசிறந்த வினை யாகலின், இதனோடு பொருந்திய காலத்தையே நமது ஆள் றோர் சமயம் என்று தனியே கூறி அதனைத் தமது உயிரி னும் சிறந்ததாகக் கருதிப் போற்றிவந்தார்கள். இங்கனம் போற்றிவந்தவர் நம்நாட்டு மக்கள் மட்டுமல்லர்; பிறநாட் டுப் பெரியார் பலரும் தத்தஞ் சமயக் கொள்கைகட்கு இடை யூறு நேர்ந்த காலத்தில் தம்மாருயிரைத் துறந்தும் அவற்றை ஒம்பிய உண்மையை அவ்வந் நாட்டு வரலாறுகளில் நிரம்பக் காணலாம். இனி, இச்சமயம் என்றசொல் சமை என்னும் பகுதியடியாகத் தோன்றி, அறிஞர்களால் சமைக்க அதாவது ஆக்கப்பட்டது எனக் கொள்வதே நேரிதாகும் எனவும் இனி, இத்தத்துவ ஆராய்ச்சி மக்களிடம் அரும்பிய காலத்து இது பற்றிய வினாக்களனைத்தையும். எழுப்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/59&oldid=852797" இலிருந்து மீள்விக்கப்பட்டது