பக்கம்:மணிவாசகர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு அவற்றிற்கு உண்மை விடைகண்டு அந்நெறியில் ஒழுகுவோரும், சில வினாக்கள் எஞ்சி நிற்க மற்றவற்றிற்கு விடையிறுத்துக் கொண்டு அந் நெறியிற் செல்வோரும் மேற். கண்ட வினாக்களுக்குத் திரிபாக விடை கொண்டு அத்துறை யிற் செல்வோருமென மக்கள் பல திறப்படுவது இயற்கை யாகலின், சமயங்களும் பலவாயின. இக்காரணம் பற்றியே தான் இற்றை ஞான்றும் பலப்பல சமயங்கள் தோன்றுவ ஆயின. ஆயின், மேலும் மேலும் சமயங்கள் தோன்றலா மோவெனின், மக்கள் அறிவு வளர்ச்சிக கேற்பத் தோன்று தல் இயற்கையை ஒத்ததாகுமேயன்றி மிகையாகாது. ஆனால், அச்சமயங்களனைத்தும் உண்மையாயிருத்தல் இயலுமோவெனின், தலைவன் விரிந்த அறிவுடையவனாய், பரந்த நோக்கமுடையவனாய், முனைப்பற்றவனாய், உயிர் கள் மாட்டுக் கருணையுடையவனாயிருப்பின் அவனாலாக் கப்பட்ட சமயத்திற் சில பகுதிகள் உண்மையாயிருக்குமென் பதை அறிவுடையோர் ஒப்ப்ாமலிரார். ஆயின், குறுகிய அறிவுடையாரும் சமயத்தை ஆக்கலாமோவெனின், அவர் உண்மை காணும் நோக்கமின்றிப் பிறசமயங்களின் மீது வைத்த பொறாமை காரணமாக ஆக்குவாரென்பதும் அங் ங்ணம் ஆக்கப்படும் அதுவும் ஆண்டவனுக்கு அமைவதாகும் என்பதும், பரந்த நோக்கமுடைய திருநாவுக்கரசுகள் திருவாய் மலர்ந்தருளிய, . - - A. விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னாரேனு மெம்பிராற் கேற்ற தாகும்" z 4. என்னும் தமிழ் மறையால் விளங்கும். இனி. கடவுள் இலக்கணங்களும், உயிரின் இலக்கணங் களும் மலத்தின் இலக்கணங்களும் பிறவுமாய இவற்றை “மக்கள், தாம் சமய ஆராய்ச்சியிற் றலைப்பட்ட காலத்தி லேயே கண்டிருப்பா ரென்றாதல் தலைப்பட்ட அண்ம்ைக் காலத்திலேனும் அறிந்திருப்பாரென்றாதல் கொள்ளுதலும் அமையாது. ஆராய்ச்சி தோன்றியபின் பன்னாட்கள்வரை க்லங்கி பின்னர் நமக்கு வேறாகியதும் நம்மினும் வலியுள்ளது 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/60&oldid=852799" இலிருந்து மீள்விக்கப்பட்டது