பக்கம்:மணிவாசகர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றுக்கொள்ளுதற்குரிய தகுதியினாலா? அன்று உணவுகொடுத் தவர்கள் இரக்கத்தினாலா? அன்று பின் என்னை? அவர்கள் "அம்மோ ஆயோ என இடையறாது போட்டக் கூக்குரல் தான். இனி. இதை நினைவில் வைத்துக்கொண்டு, நமது திரு தாவுக்கரசுகள் தனித்திரு விருத்தத்தில் கூறியருளிய, சிவனெனும் நாமங் தனக்கே யுடைய செம்மேனி * * * யெம்மான் அவனெனை யாட்கொண் டளித்திடு மாகில் . அவன்றனையான் பவனெனு காமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால் இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென்று எதிர்ப்படுமே' என்னுந் திருப்பாட்டின் கீழ் இரண்டிகளையும் நோக்கு வோமாக. - ஆளுடைய அரசு என்ன கூறுகின்றார்? 'ஆண்டவனு டைய காட்சியைப் பெறுந் தகுதி எனக்கில்லை யாயினும் அதனால் அவன் அருள்கூர்ந்து எளிவந்து காட்சிகொடா னாயினும், அவன் திருப்பெயரைச் சொல்லி இடையறாது பன்னாள்வரை யான் அழைத்துத் திரிந்தேனாயின், அவன், இவன் பன்னாளாகவிடாது கத்துகிறான், எனக்கருதி அக் கூப்பாட்டினால் உண்டாகும் உபத்திரவம் பொறுக்க்லாற் நாது எதிர்வந்து காட்சி கொடுப்பான்' என அருளிச் செய்தனர். இது மேற்காட்டிய உலகியலுடன் ஒத்திருத்தல் <历严Tā5, இத்திரு விருத்தத்தின் முன்னிரண்டடிகளால் இறைவன் திருப்பெயரையறிந்து அதனால் அவனை அழைத்தற்கும் அவன் திருவருள் வேண்டும்' எனவும் இன்றேல் அது முடியாது’ எனவும் குறிப்பித்தது கருதத்தக்கது. இக்கருத் தைப் பின்னும் அப்பெரியார், "என்னை ஏது அறிந்தில னெம்பிரான் தன்னை நானுமுன் னேது மறிந்திலேன் 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/77&oldid=852817" இலிருந்து மீள்விக்கப்பட்டது