பக்கம்:மணிவாசகர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அடியடைந்தாரா? அடியார்களனைவரும் இறைவன் திருவடிப்பேறு ஒன் றையே விரும்பி நின்று அதனையே அடைவார் என்பது அவர்களின் உண்மை வரலாறுகளில் காணப்படுவதொன் தாகும். அடியார் என்ற சொல்லும் அப்பொருளை வலி யுறுத்தும், ஆண்டவன் அடிப்பேறுதான் வீடுபேறு என்பது இதனை, நமது அன்பர் திருவாசக யாத்திரைப்பத்தில், போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட்டுடையான் கழல்புகவே' எனவும், 'போமாறமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே" . எனவும், "கிற்பார் கிற்க கில்லாவுகினில் லோமினி காஞ்செல்வோமே பொற்பா லொப்பாந்திரு மேனிப்புயங்கன்ஆள்வான் பொன்னடிக்கே" எனவும், திருமாலறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று . சேர்வோமே" எனவும், கூறியருளியவாற்றால் அறிக. இன்னும் திருநாவுக்கரசுகள் தாம் இறைவன் றிருவடி யுடன் இரண்டறக் கலக்கச்செல்லும் அந்நிலையிற் பாடி யருளிய எண்ணுகேன் என்று தொடங்குந் திருத் தாண் டகத்தின்கண், புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' - 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/79&oldid=852820" இலிருந்து மீள்விக்கப்பட்டது