பக்கம்:மணிவாசகர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தனியனேன் பெரும்பிறவிப் பெளவத்து எவ்வத் தடக்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைகேர் துவர்வாயார் என்னுங் காலாற் கலக் குண்டு காமவான் சுறவின் வாய்ப்புட்(டு) இனியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதலந்த மில்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே" - - . (திருச்சதகம்-27) என்னுந் திருப்பாட்டால் நன்கு விளக்குகின்றார். இங்ங் னம் திருவைந்தெழுத்தாகிய புணை தமக்குச் செய்த, காலத் தினாற் செய்ததும், செய்யாமற் செய்ததும் பயன்தூக்காது செய்ததுமாகிய அவ்வுதவியானது, ஞாலம் வானம், கடலா கிய இம்மூன்றினும் பெரிதாகத்தோன்ற அதற்குக் கைம் மாறாகத் தாம் யாது செய்யாலாமென அடிகள் துருவித் துருவி ஆய்ந்து யானிதற்கிலனோர் கைம்மாறு' என்னும் முடிவுக்கு வந்து, நன்றி செய்தாரை வாழ்த்துதலாகிய நல் லார் மரபுப்படி, நமச்சிவாய வாழ்க, எனக் கூறியருளினர். இனி, கடலின் நடுவண் கிடந்து கலங்கும் ஒருவனுக்குப் புனை ஒன்றுகிட்டி, கரைகிட்டாதிருப்பின், அக்கடலில் மூழ்கி இறத்தலாகிய துன்பமட்டும் இல்லாதிருக்கலாமே யன்றி கரையடைதலாகிய இன்பத்தைப் பெறாராகலின் துன்ப நீக்கத்திற்குக் காரணமாயிருந்த திருவைந்தெழுத் தைக் கூறிய நமது அடிகள் இன்ப ஆக்கத்திற்குக் காரண மாயிருந்த இறைவன்"திருவடியை வாழ்த்துவான் வேண்டி "நாதன்றாள் வாழ்க’ என வாய்மலர்ந்தருளினர். இன்னும் அதன் கீழ்வரும் பதினான்கு அடிகளில் அத்திருவடி வாழ்க வெல்க, போற்றி எனக்கூறியருளியதையும் காண்க. இன்னும் அடிகள், போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும் ஏக நின்கழல் இணையலாது" 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/82&oldid=852825" இலிருந்து மீள்விக்கப்பட்டது