பக்கம்:மணிவாசகர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணம் பற்றியேயாம். நமது அடிகளின் பெருமைக்குக் கார ணம் அவர் ஆண்டவனிடத்து வைத்த மெய்யன்பு ஒன்றே தான். இவ்வுண்மையை, துறவு நிலையால் பெருமையடைந் தவரெனக் கருதி, 'பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆருங் துறக்கை யளிதரிது’ எனத் தாயுமான அடிகளாற் போற்றப்பட்ட பட்டினத் தடிகள் - - விததகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய வன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்' என்பதனால் விளக்கியருளினார். இன்னும் உமாபதி சிவனார் அருளியதாக வழங்கும் "வள்ளுவர்சீ ரன்பர்மொழி வாசகக்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணங் தொகுசித்தி யோராறுங் தண்டமிழின் மேலாங் தரம்' என்னும் பாடலில், நமது அடிகளின் இயற்பெயர் ஒன்றை யுங் குறிப்பிடாது 'அன்பர் மொழி வாசகம் என்றே குறிப் பிட்டிருத்தல் காண்க இன்னும் அவர் ஒர் அன்பர் என்னும் உண்மையை வலி யுறுத்துதற்கு அவரியற்றியருளிய திருவாசகம் ஒன்று போதா தோ? வேறு சான்றும் வேண்டுமோ? திருவாசகத்தி லுருகார் , ஒருவாசகத்திலுமுருகார்' என்பது அநுபவ முடைய பெரியார் பழமொழியன்றோ? அவர் அன்பராக இல்லாவிடின் அவர் வாசகம் தன்ன்ைப் படிப்போன்ரயுங் கேட்போரையும் எங்ங்ணம் அன்பராக்கும் வன்மையுடைய தாகும்? ஒருவன் தன் பழக்கத்தில் இல்லாததொன்றைக் கூறி னானாயின், அக்கூற்றுக்கு மக்களைத்தன் வழிப்படுத்தும்

  • 91
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/91&oldid=852835" இலிருந்து மீள்விக்கப்பட்டது