பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாங்குகிறேன் என்பவைகள் எல்லாம்கூட குறிப்பிடப்பட்டு - ஒரு சுயமரியாதைத் திருமண விழவிற்கு எப்படி மண விழா அழைப்பு மடல் அச்சடிக்கப்படுமோ அவ்வாறு அச்சடிக்கப்ட்ட இதழை என்னிடத்திலே தந்துவிட்டுப் போனார்கள். மணமகன் வீட்டாருடைய அழைப்பு மடல் வந்த பிறகு, நேற்றைய தினம் மணமகள் வீட்டாருடைய அழைப்ப மடல் வந்தது. அதிலும் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய தலைமையில் திருமணம் நடைபெறும் என்றுதான் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் பத்திரிகையினுடைய தொடக்கத்திலேயே பகவான் முருகன் அருள் ப்பொழுது நடைபெறுகின்ற வடமொழி ஆண்டைக் குறிப்பிட்டு, காலை 10 மணிக்குமேல் 11 மணிக்குள்ளாக, இன்ன லக்கினத்தில், இன்ன நட்சத்திரத்தில், பூரண சித்தயோகம் நிறைந்த நன்னாளில் டாக்டர் கலைஞர் வடமொழி ஆண்டைக் குறிப்பிட்டு. கருணாநிதி அவர்கள் தலைமையில் இன்னாருக்கும், இன்னாருக்கும் திருமணம் நடைபெறும் என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது. நம்முடைய பட்டுத்துணி வேலியிலே இருக்கின்ற முள்ளிலே மாட்டிக் கொண்டிருக்கிறபொழுது, பட்டுத்துணியைப் படார் என்று இழுத்துவிடலாம். வேலியிலே முள்ளில் சிக்கிக் கொண்டது என்பதற்காக.. ஆனால், அப்படி இழுப்பதால் முள்ளுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; பட்டுத் துண்டுதான் கிழியும். அதைப் போலத்தான் மூட நம்பிக்கைகள் என்கின்ற முள்ளில் - முள் வேலியில் - தமிழ்ச் சமுதாயம் என்ற பட்டுத்துணி விழுந்து கிடக்கிறது; அதை மெல்ல மெல்லத்தான் எடுத்துத் தீரவேண்டும். எண்ணெயும் தண்ணீரும் சுயமரியாதைத் திருமணங்கள் குறித்து இன்று இங்கே நம்முடைய 'கும்பகோணம் பிரதர்ஸ்' ராமசாமி முதலியாரும், பழனியப்ப முதலியாரும் பேசினார்கள். Ra நான் என்னுடை இளம்பிராயத்திலேயே கறுப்புச் சட்டை அணிந்து திராவிர் கழகப் பேச்சாளனாக என்னுடைய பணியை பெரியார் தலைமையில் தொடங்கிய மிக இளம்பிராயத்திலேயே 6