பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னெடு நாட்களுக்கு முன்பு பழந்தமிழர்களுடைய காலங்களிலேயே நாம் நம்முடைய கலை-பண்பாடு நம்முடைய இலக்கியம்-நம்முடைய வரலாறு-இவைகளையெல்லாம் ஊன்றிப் படித்த நேரத்தில், தமிழன் அவனுக்கென ஒரு முறையை வகுத்துக் கொண்டு தன்னுடைய மணவிழாவை நடத்திக் கொண்டான் என்று நம்முடைய தமிழ் இலக்கியங்கள் எல்லாம் எடுத்துக் காட் டியிருக்கின்றன. அது இடைக்காலத்திலே வந்து புகுந்த ஒரு சில நம்பிக்கைகளின் காரணமாக, சில முறைகளின் காரணமாகப் பாழ்பட்டுப் போயிற்று. இருந்தாலும், அன்றைக்கு இருந்த அந்த முறையை மீண்டும் தமிழ்ச் சமுதாயத்திலே அறிமுகப்படுத்திய பெருமை நம்மை ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்களுக்கும் நம்மையெல்லாம் அரசியலிலே ஈடுபடுத்தி நடமாடவிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் உரிய ஒன்றாகும். திருமணத் தளமும் திராவிடர் களமும் கிவ் இந்தத் திருமணங்கள் எவ்வளவு தேவையானவை என்பதை நெருக்கடி நிலை நேரத்தில் நான் உணர்ந்தேன். நெருக்கடி நிலைக் காலத்திலே பொதுக் கூட்டங்களிலே பேசமுடியாது. மேடை போட்டு கட்சி அரசியல் பேச முடியாது. கருத்துக்களை எடுத்துச் சொல்ல முடியாது என்கின்ற நிலை இருந்த பொழுதுதான் கட்சி அரசியல் பேசுவதற்கு ஒரு களமாக அமைத்துக் கொண்டது, அமைந்தது திருமண விழாக்கள்தான். 6 அப்படிப்பட்ட திருமண விழாக்களிலே நான் நிச்சயமாக கட்சி அரசியல் பேசினேன். அப்படிப் பேசியபொழுது பெரியாரையும், அண்ணாவையும் மற்ற தலைவர்களையு ம் எண்ணிக் கொண்டேன். இப்படி ஒரு முறையை வகுத்துவிட்டுச் சென்றீர்களே! இல்லாவிட்டால் என்னுடைய கருத்துக்கச்ை சொல்லுவதற்கு முடியாமலேயே போயிருக்கும். அத்தகையப் பெருந்தகையாளர்களுக்கு - பேரறிவாளர்களுக்கு, இப்படிப்பட்ட விழாக்களில் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம். க 9 10 11000 150 1.