பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றோர் ஏற்பாடு பெரியவர்கள் பார்த்து நடத்துகின்ற திருமணங்களும் நாட்டிலே உண்டு. மணமகனோ- மணமகளோ அவர்களாகவே தங்களுடைய வாழ்க்கைக்கு உற்ற துணை இவர்கள் என்று நிச்சயித்துக் கொண்டு நடத்திக் கொள்கிற திருமணங்களும் உண்டு. ஆனால் பெரியவர்கள் பார்த்து நடத்துகின்ற திருமணங்கள் எல்லாம் தீதாகி விடும் என்றோ - அல்லது ஒருவரையொருவர் காதலித்து நடத்திக் கொள்கிற திருமணங்கள் எல்லாம் தீதாகிவிடும் என்றோ முடிவுக்கு வர முடியாது. இரண்டிலும் நன்மை, தீமை உண்டு. பெரியவர்கள் பார்த்து நடத்துகின்ற திருமணங்களிலும் தீமைகள் ஏற்படுவது உண்டு. நன்மைகள் ஏற்படுவதும் உண்டு. அதைப் போலவே ஒருவருக்கொருவர் காதலித்து நடத்திக் கொள்கிற திருமணங்களிலும் நன்மைகள் ஏற்படுவது உண்டு; தீமைகள் ஏற்படுவதும் உண்டு. நமக்கு இருக்கிற பிரச்சினை எல்லாம் பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்கின்ற திருமணங்களானாலும், காதலித்து நடத்திக் கொள்கிற திருமணங்களானாலும், அது நடைபெறுகின்ற முறை எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் இன்றைக்கு இருக்கிற சர்ச்சையே. அவர்கள் நடத்திக் கொள்கிற திருமணம்- அவர்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப - கலாச்சாரத்திற்கு ஏற்ப - நாகரிகத்திற்கு ஏற்ப - வரலாற்றிற்கு ஏற்ப இருக்க வேண்டுமா? அல்லது அறிவு இயக்கத்திற்கு அப்பாற்பட்ட முறையில், மூட நம்பிக்கை மொய்த்துக் கிடக்கின்ற சூழ்நிலையில் அந்தத் திருமணம் நடக்க வேண்டுமா என்ற இந்தக் கேள்விக்கு விடை காணத்தான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திலே இந்தத் திருமண முறைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினார்கள். அந்த முறையைத்தான் இன்றைக்கு நாம் கடைபிடிக்கிறோம். பெரியவர்கள் பார்த்து நடத்திய திருமணங்களுக்கும் பழங்காலத்து கதைகளிலே எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. அவரவர்கள் காதலித்து நடத்திக் கொண்ட திருமணங்களுக்கும் பழங்காலத்து கதைகளிலே எத்தனையோ 11