பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக்காட்டுகள் உண்டு. இராமயணக் கேள்விகள் செ சய்து சீதையும், ராமனும் திருமணம் செய்து கொண்டார்கள் என்றால், அவர்கள் காதலித்துத் திருமணம் கொண்டார்களா? அல்லது பெரியவர்கள் ஏற்பாடு செய்த சுயம்வரத்திலே ராமன் வெற்றி பெற்று சீதையை திருமணம் செய்து கொண்டானா என்றால், அங்கேதான் சிக்கலேகூட வருகிறது. ராமன் மிதிலாபுரியில் இருக்கிற வில்லை வளைக்க வில்லை வளைத்து அதிலே வெற்றி பெற்று சீதையை மணம் புரிய வந்து கொண்டிருக்கிறான். ஜனகனுடைய ஏற்பாடு அப்படி. அந்த வில்லை யார் வளைக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தன்னுடைய மகள் சீதையைத் திருமணம் செய்து தருவேன் என்று ஜனகன் அறிவித்திருக்கிறான். ராமனும் இலக்குவனும் வருகிறார்கள்; விசுவாமித்திரரும் அங்கே வருகிறார். வந்து மாளிகைக்குள் நுழையாமல் இருக்கும்போதே, வரும் வழியிலேயே மாடத்தில் நிற்கும் சீதையை ராமன் பார்க்கிறான். ராமனும் சீதையும் பார்க்கிறார்கள்; அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் என்று ஒருவரையொருவர் நோக்கிய நேரத்திலேயே காதல் பிறந்து விடுகிறது. கொண்டிருக்கும்போதே, நான ன் கேட்கிறேன், வந்த ராமன் வில்லை வளைக்காமல்போய் இருந்தால் - அந்தக் காதல் என்ன ஆவது? அது ஒரு கேள்விக்குறி! நான் அதை விட்டுவிடுகிறேன். வில்லை வளைத்தால்தான் திருமணம். இதுதான் ஜனகனின் நிபந்தனை. நான் கேட்பது - வில் வளைக்கப்பட்டதா? அல்லது உடைக்கப்பட்டதா? வளைந்திருந்தால் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அவன் உடைத்தேவிட்டான். இராவணனால் அந்த வில்லைத் தூக்க முடியவில்லை; பெரிய பெரிய வீராதி வீரர்கள் எல்லாம் தூக்கிப் பார்த்தார்கள். முடியவில்லை. பிறகு ராமன் வந்து எடுத்தான்; எடுத்த எடுப்பிலேயே வில் முறிந்து விழுந்தது. அவனுக்குச் சீதையைத் தந்தார்கள். இது ராமாயணம். ஒருவேளை ராவணனும் மற்றவர்களும் அந்த வில்லின் தன்மையை உணர்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும். அதனைக் 12