பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலைக் காதல் சகுந்தலையும், துஷ்யந்தனும் கானகத்தில் சந்தித்து கணையாழி மாற்றிக் கொள்கிறார்கள்; அது காதல் திருமணம். பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் அல்ல; அதற்குப் பிறகு அந்தக் கணையாழியைச் சகுந்தலை காணாமல் போக்கிவிட்ட காரணத்தால், சகுந்தலை அரண்மனைக்கு வருகின்ற நேரத்தில் துஷ்யந்தன் அவளை நீ யார் என்றே கேட்கிறான். காரணம் கணையாழி இல்லாத காரணத்தால் நீ என்னுடைய மனைவியே அல்ல என்று மறுத்துவிடுகிறான். பிறகு அந்தக் கணையாழி எப்படியோ கிடைத்த பிறகு ஏற்றுக் கொள்கிறான். எனவே காதல் திருமணத்திலும் சங்கடம் உண்டு. பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்கின்ற திருமணத்திலும் சங்கடம் உண்டு. வ ஆனால் ஒன்றை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கின்ற திருமணம் அந்தச் சாதிக்குள்ளேயே நடத்திக் கொள்கின்ற திருமணங்களாக இருக்கும். பெற்றோர்களை மீறி நடைபெறுகின்ற ற காதல் திருமணங்கள் நூற்றுக்குத் தொண்ணூறு திருமணங்கள் கலப்புத் திருமணங்களாக இருக்கும். அந்த வகையில் சாதி ஒழிப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டுமானால்-காதல் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் நாட்டிலே நடைபெற வேண்டும் என்கின்ற கொள்கை உடையவன் நான். கொள்கையை உதட்டளவிலே சொல்லி விட்டுப் போகிறவன் அல்ல; வீட்டளவில் அதனை நடத்திக் காட்டிய பெற்றோர்களில் ஒருவன்தான் நான். காதல் திருமணங்கள் மூலம் கலப்புத் திருமணங்கள் ஏற்பட வழி ஏற்படும். தமிழ் நிலம் சமத்துவம் வீட்டில் சுவையான பண்டங்கள் ஒரு ஆணுக்கு எப்படித் தேவையோ, தான் உண் ணுகின்ற பண்டங்கள் எப்படிச் சுவையாக இருக்க வேண்டுமென்று ஆண் கருதிறானோ, 14