பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதைப்போலவேதான் பண்டங்கள் சுவையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனக்கென கணவன் தான் விரும்புகிற பொருட்களை வாங்கித் தந்தாலும், தராவிட்டாலும், தன்னுடைய கணவனுடைய நலம் ஒன்றே உயிரென கருதுகிற பெண்கள் நிறைந்த நிலம்தான் நம்முடைய தமிழ் நிலம். பண்பாடு தமிழ் நிலத்திலே உள்ள பெண் உள்ள பெண்களுடைய களுடைய பண் அத்தகைய போற்றுதற்குரிய பண்பாடாக இருந்து வருகிறது. இதிலே ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரு சமத்துவ சூழ்நிலை ஏற்படவேண்டும். ஆணும், பெண்ணும் எப்படி சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்களோ அதைப்போல உரிமைகளையும் அவர்கள் பகிரந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகிட வேண்டும். ஆண்கள் எப்படி விஞ்ஞானிகளாக வித்தகர்களாக விளங்குகிறார்களோ, அதைப்போல பெண்களும் விளங்கிட வேண்டும் என்ற சீரிய சிந்தனை இன்று உலகத்திலே பல்வேறு பகுதிகளிலே கிளர்ந்தெழுந்து, அந்தச் சிந்தனை இந்தியத் திருநாட்டையும் தழுவிடத் தொடங்கித் தமிழகத்திலேயும் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொதுவாக ஆண், பெண் சமத்துவம் பற்றி நாம் பேசிக்கொண்டேயிருந்தாலும், ஆண்களுக்குரிய உரிமை பெண்களுக்குத் தேவை என்று நாம் வாதிட்டாலும்கூட அந்த உரிமைகளைத் தரத் தயங்குகின்ற ஆண்குலம்தான் இன்றைக்கும் உலகத்திலேயே பெரும்பான்மையாக இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. த எனவே, உதட்டளவில் இல்லாமல் ஆண்-பெண் சமத்துவத்தை, ஆணும் பெண்ணும் உரிமைகளைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதை நாம் வழக்கத்திலே, செயலிலே கொண்டு வர வேண்டிய கடமையினை நாம் நிறைவேற்றியாக வேண்டும். அதைத்தான் இன்றுள்ள முன்னேறிய சமுதாயம் எடுத்துச் சொல்லுகிறது என்றாலும்கூட, சுயமரியாதை இயக்கத்தின் பெயரால் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், பகுத்தறிவு தளகர்த்தர்களும் அன்றும் இன்றும் இந்தச் சமுதாயம் ஓரளவு விழிப்பினைப் பெற்றிருக்கிறது. முழுமையான விழிப்பினைப் பெற்றுவிட்டதாக நான் ப் கூற இயலாது. 15