பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனென்றால், முழுமையான் விழிப்புணர்ச்சியை இந்த நாடு பெறவில்லை; குறிப்பாகத் தமிழகம் பெறவில்லை. அதிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களாக இருக்கிற நாம் பெற்றிடவில்லை. இஸ்லாமிய மணச் சடங்கு இஸ்லாமிய சமுதாயத்தினுடைய சடங்கு அவர்களுடைய திருமணமுறை இவைகள் ஏறத்தாழ தந்தை பெரியார் அவர்களால் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதை அல்லது சீர்திருத்தத் திருமணமுறையை ஒத்ததென்பதை நான் விளக்கிடத் தேவையில்லை. மதச் சம்பிரதாயங்கள் இஸ்லாமிய திருமண முறையிலே இடம் பெற்றாலும் கூட, அந்த மதச் சம்பிரதாயங்களுக்கு இடையிலேயும் ஒரு சமுதாயச் சீர்திருத்தம், புதுமைகள் அதிலே ஒளிவிடுவதை என்னால் காண முடிகிறது. என்னால் காணமுடிகிறதென்றால் எங்களுக்கெல்லாம் அதைக் காட்டித் தந்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் உண்டு. ண்டு. இ ஸ்லாமிய சமுதாயத்திலே நடைபெறுகின்ற திருமணவிழா நேரத்திலேகூட மணமகனுடைய கருத்தை அறிவதற்காக ஒரு தூதுக்குழுவும் பிறகு மணமகளுடைய கருத்தை அறிவதற்காக அதே தூதுக்குழுவும் சென்று இருவரும் தங்களுடைய ஒப்புதலை அளித்த பிறகு அவர்களுடைய வாழ்க்கை இணைப்பை ஒரு ஒப்பந்தமாகவே செய்கின்ற அந்த நிகழ்ச்சிகள் இந்தத் திருமணத்திலே இடம்பெறுகின்றன. எனவேதான் தொடக்க காலத்திலே சுயமரியாதைத் திருமணங்களைக்கூட வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றேதான் நாம் தெளிவாக அன்றைக்குக் குறிப்பிட்டோம். அதற்குப் பிறகு சுய மரியாதைத் திருமணத்தினுடைய உண்மைக் கூறுகள். இந்து மதம் என்றழைக்கப்படுகின்ற, அப்படி அழைக்கப்படுகின்ற நிலைக்கு ஆளான தமிழ்ச் சமுதாயத்தின் மக்களுடைய இல்லங்களிலே நடைபெறுகின்ற விழாக்கள் இந்த மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தைத் தந்தை பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் எடுத்துக் காட்டியபோது, அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலே நடைபெறுகின்ற இந்த ஒப்பந்தம் எத்தகைய கீர்த்தியானது என்பதை எடுத்து விளக்கியிருக்கின்றார்கள். 16