பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்படியான சீர்திருத்தம் படிப்படியாக நடைபெறக்கூடிய சீர்திருத்தங்கள் எந்தச் சமுதாயத்திலும் நடைபெற வேண்டும் என்கின்ற ஆசையுடயவன் நான். உலகத்திலே பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவைப் போல் இல்லாமல் இன்னும் எவ்வளவோ முற்போக்கான எண்ணங்கள்-எவ்வளவோ முற்போக்கான நடவடிக்கைகள் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலே நடைபெற்றிருக்கின்ற நிலைமைகளையெல்லாம் பார்த்திருக்கின்றோம். நெடிய தொடர்பு நாம் துருக்கியிலே கமால்பாட்சா இப்படிப்பட்ட இப்படிப்பட்ட புரட்சி களையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்திலே தேவை என்று அறிவித்தார். அவைகளையெல்லாம் செய்கின்ற அளவிற்கு நடவடிக்கைகளிலே ஈடுபட்டார்என்பதை இஸ்லாமிய சமுதாயத்திலே உள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் முன்னேற்றக் கழகத்திற்கும் இந்தத் தமிழகத்திலே இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல, நீண்டகாலத் தொடர்பு. நான் இந்த மங்கல விழாவில் நம்முடைய மறைந்துவிட்ட அருமைத் தலைவர்களிலே ஒருவரான காயிதேமில்லத் அவர்களை நினைவு கூர்வது தவறு ல்லை என்று கருதுகிறேன். று காயிதேமில்லத் அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சு பிரிகிற நேரத்திலேகூட அருகிலே இருந்த என்னுடைய கையைப் பற்றி தன்னுடைய கன்னங்களிலே ஒத்தியவாறு சொன்னார்; கருணாநிதி அவர்களே இந்தச் சமுதாயத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செய்திருக்கிற நன்மைகளை இந்தச் சமுதாயம் நன்றி உணர்வோடு என்றென்றும் பாராட்டும்; அதனை மறந்திடாது" என்று காயிதே மில்லத் அவர்கள் சொன்ன வாசகங்கள் இன்றும் என்னுடைய நினைவில் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கின்றன. 99 நபிகள் நாயத்தினுடைய விழா, அரசாங்க சார்பிலே கூட கொண்டாடப்படவேண்டும் - என்ற அளவிலே நபிகள் நாயகம் விழாவிற்கு விடுமுறை அளித்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி (கைதட்டல்), புதுச்சேரியிலே கொள்கைப் பரப்பும் - 17