பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டங்களிலே நாம் சந்திக்கின்ற தாய்மார்களைவிட இப்படிப்பட்ட மணவிழாக்களில் அதிக தாய்மார்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. பல்வேறு திருமண விழாக்களிலே தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இங்கே தேர்தல் பிரச்சாரத்திற்காக நாங்கள் வரவில்லை. மக்களைத் திருத்துகின்ற பிரச்சாரத்திற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்கள். மக்களைத் திருத்துவது என்றால் என்ன? மக்கள் அதிலும் குறிப்பாகத் தமிழக மக்கள் எந்தெந்த வகையிலே தங்களைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்; தங்களைத் தாங்களே பயமுறுத்திக் கொண்டிருக்கிற சூழ்நிலை இன்றிருக்கிறதா இல்லையா? தொட்டிலிலே இருந்து அப்படிப்பட்ட பயிற்சிகளை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு அளிக்கிறோமா? இல்லையா? என்பதைத் தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். தொட்டில் பழக்கம் வெளிநாட்டிலே முன்னேறியிருக்கின்ற பிரதேசங்களிலே மட்டுமல்ல; முன்னேறியிருக்கின்ற இந்திய பிரஜைகளின் குடும்பங்களிலேகூட, குழந்தை அழுதால் அந்தக் குழந்தையை சமாதானம் செய்வதற்கு என்ன வழியை கையாளுவது என்பதை நூல்கள் வாயிலாகக் கற்று அந்தக் குழந்தைகளை எப்படி சிரிக்க வைப்பது, எப்படி சமாதானம் செய்வது அது எந்தவொரு காரியத்திலே பிடிவாதமாக இருக்கிறது; அதிலிருந்து அந்தக் குழந்தையை எப்படி மாற்றுவது என்பதில் அந்தத் தாய்மார்கள் அக்கறை கொண்டு அந்தப் பயிற்சியை பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய தாய்மார்களுக்கு இருக்கின்ற சங்கடங்கள் அவர்களுக்கு இருக்கின்ற அலுவல்கள், அவர்கள் அடுக்களை வேலைகளைக் கவனிப்பதா? அல்லது வேலைக்குச் செல்கிற கணவனுக்கு நேரத்தில் உணவு சமைத்து அனுப்புகின்ற வேலையைக் கவனிப்பதா? வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களை உபசரிப்பதா என்பது போன்ற பல தொல்லைகளுக்கிடையே சங்கடப்படுகின்ற ஒரு தாய் வீட்டிலே குழந்தை அழுதால் அல்லது தொட்டிலில் படுத்துக்கொண்டு பிடிவாதம் பிடித்தால் அந்தத் தாய் குழந்தையை அடக்குவதற்கு இன்றளவும் தமிழ் நாட்டில் கடைப்பிடிக்கின்ற தந்திரம் என்ன? தூங்குகிறாயா? இல்லையா? தூங்காவிட்டால் ஐந்து கண்ணன் வருவான் என்று அந்தக் குழந்தையை மிரட்டுகின்ற . 21