பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழியைத்தான் நம்முடைய தாய்மார்கள் கடைப்பிடிக்கிறார்கள். அந்தப் பயமுறுத்தலைக் கேட்கின்ற அந்தக் குழந்தை ஐந்து கண்ணன் வருவானாமே, இரண்டு கண்கள் உள்ள நம்முடைய தாயும் தந்தையும் மிரட்டினாலே இவ்வளவு பயமாக இருக்கிறதே ஐந்து கண் உள்ளவன் எப்படி இருப்பானோ என்ற பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு தூங்குகிறது. ஆனால் அந்தத் தொட்டில் பழக்கம் என்னவாகும்? அவன் வளர்ந்து வாலிபனாக விளங்கும் காலத்தில் அவனை கோழையாக ஆக்கிவிடுகிறது. உ பேய் என்றால் எப்படி இருக்கும், பிசாசு என்றால் எப்படி இருக்கும், பூதம் என்றால் எப்படி இருக்கும் என்றெல்லாம் இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளைக் குழந்தைகளுக்குப் போதித்து அந்த நேரத்தில் அதனை அடக்கி வைக்கிற உபாயத்தை நாம் கையாளுவதால் அதனுடைய வாழ்க்கையில் அதனை ஒரு கோழையாக்கும் குற்றத்திற்கு நாம் ஆட்பட்டு விடுகிறோம். சிறிய குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை வரலாற்றறுக் குறிப்புக்களைப் படிக்கின்ற நேரத்தில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொட்டில் பழக்கம் என்று கூறுவார்கள். மணவிழா நிகழ்ச்சி என்ற காரணத்தால் தொட்டில் பழக்கம் என்பதுடன் நிறுத்துகிறேன். எதுவரையிலே என்கின்ற வார்த்தையை அமங்கலச் சொல்லை விரும்பவில்லை. ங்கே பயன்படுத்த நான் எனவே, தொட்டிலிலேயே நம்முடைய குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித்தருகிறோம். குழந்தை அழுதால் அதனுடைய தேவை என்ன என்பதை உணராமலேயே, அது பசித்து அழுகிறதா? பாலுக்கு அழுகிறதா என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அது ஒருவேளை, வாய் திறந்து சொல்லமுடியாத வயிற்று வலியால் அழுகிறதா? தலைவலியால் அழுகிறதா? கணையா? மாந்தமா? என்று இவைகளைக்கூடப் புரிந்துகொள்ளாத தாய்மார்கள், அழுகிற குழந்தையை அடக்குவதற்காக அஞ்சு கண்ணன் வருகிறான், தூங்குகிறாயா இல்லையா? என்று தொட்டிலேயே மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். ஒரு காலத்திலே தமிழ் நாட்டு வீரர்கள் முரட்டுக் காளையை அடக்கினார்கள், புலியை அடக்கினார்கள். அந்தக் காளையை அடக்கித் தான் விரும்பிய காதலியைக் கைப்பிடித்தார்கள்; புலியை வீழ்த்தி அதனுடைய பல்லையும், நகத்தையும் எடுத்து வந்து தான் விரும்புகின்ற காதலிக்குச் செய்து போட்டார்கள். யானையை 22