பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்கினார்கள் என்கின்ற அத்தகைய வீர பரம்பரையிலே உதித்த தமிழினம், இன்றைக்கு ஐந்து கண்ணன் வருகிறான்; பூச்சாண்டி வருகிறான்; பேய் பிசாசுகள் வருகின்றன என்கின்ற பயத்தைச் சின்னஞ்சிறு பருவத்திலேயே ஊட்டப்பட்டு அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக ஆகிவிடுகிற நிகழ்ச்சிகளை இன்றைக்கு நாம் பார்க்கின்றோம். ஐ. தாய்மார்கள் பெருமை ஜப்பான் ஒரு காலத்தில் யுத்தத்தால் சீரழிந்து விட்ட நாடு என்றாலும் கூட அந்த நாடு மீண்டும் விழித்தெழுந்து இன்றைக்கு அது ஒரு வல்லரசாக இல்லாவிட்டாலும் வளமுள்ள நாடாக விளங்கக் காரணம் அந்த நாட்டுத் தாய்மார்கள் தான் என்று கூறப்படுகிறது. தாய்ப்பாலோடு வீரப் பாலையும் சேர்த்து குழந்தைகளுக்கு அளிக்க வேண்டுமேயல்லாமல் அவர்களைக் கோழைகளாக வளர்த்துவிட்டால் நிலை என்னாகும் தெரியுமா? அவன் 25 வயது காளையாகி, வீட்டிலே படுத்துக் தூங்குகிற நேரத்தில் இப்படிப்பட்ட கிராமப் பகுதிகளில் இரவு 12 மணிக்கு ஏதோ இயற்கையின் தொந்தரவின் காரணமாக வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகின்ற நேரத்தில் அங்கே ஒரு எருக்கஞ்செடி ஆடினால், அதனைப் பார்த்து பேய் வருகிறது, பூதம் ஆடுகிறது என்று எண்ணி அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுகின்ற காட்சிகள் பலவற்றை நாம் கண்டு வருகிறோம். ம் பேயும் இல்லை; பூதமும் இல்லை; எல்லாம் கற்பனைகள் என்று ஏறத்தாழ ஐம்பது, அறுபது ஆண்டுக் காலமாகச் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக எடுத்துச் சொல்லி இன்று பேய், பூதங்கள் பற்றிக் கவலைப்படுகின்ற மக்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். பேய், பூதம் எல்லாம் யாருக்கு முதலில் பிடிக்கிறது என்றால் பெண்களுக்குத்தான் பிடிக்கிறது. ஆண்களுக்கு அதிகமாகப் பேய் பிடிப்பதில்லை. காரண பெண்களுக்கு அதிகமாக தலைமுடிஇருப்பதோ என்னவோ, நமக்குத் தெரியாது. காரணம் பெண்களின் உள்ளம் பயந்த உள்ளம். அப்படி பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட உள்ளம்; அவர்கள் கோழைகளாக ஆக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால்தான் அவர்கள் ஆடுகிறார்கள். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் அவர்கள் அப்படி ஆக்கப்பட்டு, 23