பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரோ நாலரையில் இருந்து ஆறுவரை ராகுகாலம் என்று எழுதி வைத்தார்கள். கள். அதுவும் வருவதாக நீங்களும் நம்பிக்கொண்டு அதிலேயே திருமணத்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறீர்களே! அப்படியானால் பஞ்சாங்கம் எழுதியவர்கள் எழுதிய ராகுகாலத்தை நீங்கள் நம்புகிறீர்களா? ஏற்றுக் கொள்கிறீர்களா என்று நான் கேட்டேன். ய நாலரையில் இருந்து ஆறு வரை ராகுகாலம் வரவும் இல்லை போகவும் இல்லை என்கின்ற எண்ணம் ம் உடைய சுயமரியாதைக்காரர்கள் நாலரையில் இருந்து ஆறு வரை ராகுகாலம் வருவதை ஒப்புக்கொண்டு நான் அதிலேயே திருமணம் நடத்துகிறேன் பார் என்று கூறுவது கூட ஒருவிதமான மூடநம்பிக்கைதான் என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். வசிஷ்டர் விஞ்ஞானமும் பஞ்சாங்கமும் எல்லா நேரமும் கடவுள் என்று ஒருவன் இருந்து உருவாக்கிய நேரம்தான் என்றால், அவன் உருவாக்கிய நேரம் எல்லா நேரமும் நல்ல நேரம் என்றே எண்ணிட வேண்டும். அப்படி எண்ணாவிட்டால் கடவுளைக் குற்றம் சாட்டுகிறோம் என்று பொருள். எல்லா நேரத்தையும் உருவாக்கினான் என்பது உண்மையானால், எல்லா நேரமும் நல்ல நேரம் என்று நாம் எண்ணிடவேண்டும். இதிலே நாம் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பிரிக்கத் தேவையில்லை. எத்தனையோ சுயமரியாதைத் திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்குத் தொடங்கி 6 மணிவரையில் நடைபெற்றுள்ளன. கொழுத்த இராகுகாலம் என்பார்களே அந்த இராகுகாலத்தில் நடைபெற்றுள்ளன. அப்படி நடைபெற்ற காரணத்தால் அந்தக் குடும்பத்திலே ஏதாவது குந்தகம் ஏற்பட்டதா என்றால் இல்லை. அது மாத்திரமல்ல. குழந்தைகளே அவர்கள் பெறவில்லையா? என்றால் யாராலேயும் சொல்லமுடியாது. உள்ளவர்களுக்குச் இராமயணத்திலே நம்பிக்கை சொல்லுகிறேன். குறிப்பாகத் தாய்மார்களுக்குச் சொல்லுகிறேன். இராமருக்குப் பட்டாபிஷேகம் நடத்த நாள் பார்த்தது யார்? நம் 25