பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே, விஞ்ஞானத்தினுடைய புதுமை மலர்ந்து, அந்தப் புதுமையின் காரணமாக நாம் பெற்றிருக்கின்ற அறிவு வளர்ந்து பகுத்தறிவுத் தன்மையும் வளர்ந்து, நாட்டுக்கு நாடு கோள்களுடைய வடிவங்கள் வேறுபடுகின்றன என்ற சூழ்நிலையையும் புரிந்து காலத்திலே நாம் காண்டு கொண்டிருக்கிறோம். இருக்கின்ற வாழ்ந்து நாம் சுக்கிரன் என்றால் இதுவரையிலே எண்ணிக்கொண்டு இருந்தது என்ன? அது ஒரு திசை. அந்தச் சுக்கிர கிரகத்தினுடைய திசை நமக்கு ஏற்படுமேயானால், எல்லாவிதமான அதிருஷ்டங்களும் ஏற்படும். சுக்கிர திசை வந்து விட்டால் அவன் ராஜாவாக இருப்பான். அவனுடைய வாழ்க்கை ராஜபோகமாக இருக்கம் என்று மாத்திரம்தான் நாம் கற்றுக் கொண்டிருந்தோம். விஞ்ஞான வளர்ச்சி ரஷ்ய நாட்டுக்காரர்கள் அவர்களுடைய விஞ்ஞானப் புதுமையின் காரணமாக சுக்கிரனுக்கே சென்று அந்தச் சுக்கிரனிலே இருக்கின்ற மண்ணை-கல்லை இங்கே உலகத்திற்குக் கொண்டு வந்து, அதனை ஆராய்கின்ற அளவிற்கு சுக்கிரனுக்கே விண்வெளி கப்பலை அனுப்புகின்ற அளவிற்கு ரஷ்யா முன்னேறி இருக்கிறது. அதைப்போலவேதான் அமெரிக்காவிலே உள்ளவர்கள் சந்திர மண்டலத்திற்குச் சென்று, சந்திர மண்டலத்திலே அடியெடுத்து வைத்துச் சந்திரமண்டலத்திலே நடந்து சந்திரமண்டலத்திலே இருக்கிற கற்களை எடுத்து வந்து நமக்கெல்லாம் காட்டுகின்ற அளவிற்கு அங்கே விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், நாமோ, இன்னமும் சந்திரனைப் பார்த்து வளர்பிறையா? தேய்பிறையா? எந்தப் பிறையிலே கல்யாணத்தை வைத்துக் காள்ளலாம் என்று நாள் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே அல்லாமல் சந்திரன் எங்கே இருக்கிறான்? சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு என்ன? சந்திர மண்டலத்திற்கு செல்ல முடியுமா? அங்கே மனிதன் வாழ முடியுமா? வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க முடியுமா? அங்கே ஜீவராசிகள் இருக்கின்றனவா? அதேபோல செவ்வாய் கிரகத்தைக் காணமுடியுமா என்று இந்த உலகத்தை விட்டு அண்டத்திலே இன்றைக்கு ஆயிரக்கணக்கிலே நிரம்பிக் 27 -