பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளவேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாகிறோமே அல்லாமல் வேறு அல்ல. பஞ்சாங்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தினம் உலகத்திலே இருக்கின்ற விஞ்ஞானிகள் விண்ணிலே இருக்கின்ற கோள்களைப் பற்றி அதனுடைய நன்மைகளைப் பற்றி என்ன கூறுகிறார்களோ அவைகளையெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பஞ்சாங்கத்தை எழுதியவர்கள் கூறி வைத்து இருக்கிறார்கள். கூ வானத்திலே சஞ்சரிக்கிற சூரியன் வடக்குத் திசையிலே சாய்ந்து எத்தனை மாதம் செல்வான் என்றும், என்றைக்கு அந்த ரியன் தட்சணாயனமாக தெற்குத் திசையிலே நகர்ந்து செல்வான் என்றும் பஞ்சாங்கக் குறிப்புகள்தான் நமக்குத் தெரிவிக்கின்றன. சூ க என்னுடைய கிராமத்திலே நான் சின்னஞ்சிறு பிள்ளையாக இருந்தபொழுது, யார் வீட்டிலாவது குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை பிறந்த நேரத்தைக கணிப்பதற்காக என்னுடைய தந்தையை நாடி ஒடோடி வருவார்கள். இரவு நேரமாக இருக்குமேயானால் என் தந்தை உடனடியாக ஆகாயத்தை நோக்கி எந்தெந்த மீன்கள் சந்திரனுக்கு எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்து நேரத்தைச் சரியாகச் சொல்வார். யாராவது படித்தவர்கள் அல்லது கைக்கடிகாரம் வைத்து இருப்பவர்கள் அவர் சொல்லுகிற நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் அவர் சொன்ன நாழிகையும் மணியும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது மிகச் சரியாக இருக்கும். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், என் தந்தையின் திறமையைச் சொல்வதற்காக அல்ல. இப்படி, விண்மீன்களைப் பார்த்து, நட்சத்திரங்களைப் பார்த்து நேரத்தைக் கணிக்கக்கூடிய ஆற்றலையும் வழிமுறைகளையும் பஞ்சாங்கங்கள் நமக்குத் தந்து இருக்கின்றன. 1994இன்ன இன்ன மாதங்கள் மழைபெய்யக்கூடிய மாதங்கள் என்றும் இன்ன இன்ன மாதங்கள் வசந்தகாலம் என்றும் இன்ன இன்ன மாதங்கள் குளிர்காலம் என்றும் இப்படியெல்லாம் வகுத்தளித்து என்ன என்ன கோள்கள் எந்த எந்தப் பாதையிலே சஞ்சரிக்கும் என்றும் எழுதி வைத்து இருக்கிறார்கள். 29