பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் சனி கோளினுடைய உருவத்தை எத்தனையோ ஆண்டு ய காலமாக பாலபருவத்தில் இருந்து ஒரு பந்தைச் சுற்றி வளையங்கள் வானவில்லைப் போல வளையங்கள் இருப்பதைப் பார்த்து இருக்கிறோம். இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்குக் கலத்தைச் செலுத்தக்கூடிய அமெரிக்க விஞ்ஞானிகளாகட்டும் அல்லது ருஷ்ய விஞ்ஞானிகளாகட்டும் அவர்கள் எல்லாம் சனிகிரகத்தையே படம் எடுத்து உலக மக்களுக்கு காட்டுகின்ற நேரத்தில் நாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் எப்படி சனிக்கிரகம் இருக்கும் என்று கருதினோமோ, அந்த கிரகத்தை இப்பொழுது படம் எடுத்துப் பார்க்கின்ற நேரத்தில் அன்றைக்கு இந்த கோள் ஆராய்ச்சி செய்தவர்கள் கிரக ஆராய்ச்சி செய்தவர்கள் எப்படி படம் எடுத்துக் காட்டினார்களோ அப்படிதான் நாம் இன்றைக்கும் புகைப்படங்களின் மூலமாக நாம் அந்தக் கிரகத்தைப் பார்க்க முடிகிறது. எனவே பழைய காலத்தில் கண்டுபிடித்தவர்கள் எல்லாம் ஏதோ குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், நம்முடைய நாட்டைப் பொறுத்தவரையில் நாம், அவைகளையெல்லாம் தெய்வீகத்திற்கு அடிமையாக்கி - மதத்திற்கு அடிமையாக்கி புராணக் கருத்துக்களுக்கு அடிமையாக்கி அதோடு விஞ்ஞானத்தைக் கலந்து அதை விரிவு படுத்தாமல், அதையே மேலும் வளர்த்துக் கொள்ளாமல் அப்படி வளர்த்துக் கொள்ளப்பட்ட அறிவின் காரணமாக உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய சக்தியை நாம் பெற்றுக்கொள்ளாமல் மூடநம்பிக்கையின்பால் விழுந்துவிட்டோம். அப்படிப்பட்ட ஒரு - - சில பெரிய சமுதாயத்தை மூடநம்பிக்கையிலே ஆழ்த்திவிட்ட சில எண்ணங்கள் கொள்கைகள் சில கதைகள் இவைகளின் காரணமாகத் தாழ்ந்துவிட்ட இந்தச் சமுதாயத்தை கைதூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சமுதாயத்தினுடைய கண்களை மறைத்துக் கொண் கொண்டிருக்கின்ற மாசு மருக்களை துசு தும்புகளையெல்லாம் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்கள். 5 30