பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் ...... பொதுமக்கள் கருத்தை வலிவாக முன் நடக்கச் செய்தால் சட்டம் நொண்டிக் கொண்டே பின்னால் வரும் என்பது ஆங்கிலப் பழமொழி. தன்மான இயக்கம் உருவாக்கி வெற்றி கண்ட பல்வேறு களங்களில் சுயமரியாதைத் திருமணமும் ஒன்று. இந்தக் கலாச்சாரப் புரட்சியில் தன்னை ஒரு போர் வீரனாய் ஒப்படைத்துக் கொண்டு இன்று வழி காட்டும் தலைவராயுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் செறிந்த - திருமண வாழ்த்துரைகளின் தொகுப்பை பணிவுடன் உங்கள் முன் படைக்கின்றோம். என். செல்வேந்திரன் கழக வெளியீட்டுச் செயலாளர், தி.மு.க.