பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதைத் திருமணம் வாழ்வும் வாழ்க்கையும்: - வாழ்வு என்ற சொல் மிருகங்கள், பறவைகள் இவைகளைக் குறித்துவரும் நேரத்தில் மிருகங்கள் வாழ்கின்றன பறவைகள் வாழ்கின்றன என்றும் மனிதர்களைக் குறிக்கின்ற நேரத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்குப் பதிலாக மனிதர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அளவிலும் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். மனிதன் வாழ்வதில்லை; அவன் வாழ்க்கை நடத்துகிறான். இலக்கணத்தோடு எப்படி வாழ வேண்டும் என்று சில வரைமுறைகளை வகித்துக்கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துகின்றான். வசதிக்கேற்ப இயற்கையின் நியதிப்படி அவன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் என்றில்லாமல் சமுதாயத்தினுடைய முன்னேற்றத்திற்கேற்ப வளர்ச்சிக்கேற்ப வாழ்க்கை நடத்திக்கொண்டு வாழ்கிற ஆற்றல் பெற்றவன்தான் மனிதன். அந்த ஆற்றலை உணராது இருந்தது இந்தத் தமிழகம் ஒரு காலத்திலே. அதை நமக்கெல்லாம் உணர்த்தியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். சுயமரியாதைத் திருமணம் இத்தகையத் திருமணங்கள் இந்த முறையில் ஏன் நடைபெற வேண்டும் என்பதற்கான விளக்கங்களை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் தமிழகத்திலே இன்று இருப்பதாகவும் ம் எனக்குத் தெரியவில்லை. தந்தை பெரியார் அவர்கள் பல எதிர்ப்புகளுக்கிடையே இழிமொழிகளைத் தாங்கிக் கொண்டு, ஏசல் கணைகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்ச் சமுதாயத்திலே பரவிட வேண்டும் என்கிற தராத ஊக்கத்தோடு தொடர்ந்து ஆற்றிய அரும்பணியின் காரணமாகவும் அவருக்குத் துணை நின்று பேரறிஞர் அண்ணா அவர்களும், அவர்களால் வளர்க்கப்பட்ட தம்பியரும் தொய்வில்லாமல் ஆற்றிய தொண்டின் காரணமாகவும் ஒரு ஐம்பது ஆண்டுக் காலத்திற்கு முன்பு இகழப்பட்ட அல்லது வியப்புடன் நோக்கப்பட்ட இந்தத் திருமணமுறை இன்று இ தமிழர்கள் பெரும்பாலோரால் வரவேற்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 1